ஞாயிறு, 31 அக்டோபர், 2010

படுக்கைக் கோடுகளை வேர்டில் போடுவது எப்படி ?

வேர்ட் தொகுப்பில், ஆவணங்களில் படுக்கைக் கோடுகள் தயாரிப்பதற்கு, எந்த கீகளைச் சிலமுறை அழுத்தினால் போதும், கோடுகள் தயாராகிவிடும் என இந்த பிரிவில் எழுதி இருக்கிறோம். மீண்டும் அவற்றை இங்கு நினைவு படுத்தலாம்.

1. மூன்று முறை ஹைபன் கீ அழுத்தி என்டர் செய்தால், அழுத்தமில்லாத நீள கோடு கிடைக்கும்.

2. மூன்று முறை அண்டர் ஸ்கோர் எனப்படும் 0க்கு அடுத்த கீயினை அழுத்தி, என்டர் செய்தால், சற்று அழுத்தமான நீளக் கோடு கிடைக்கும்.

3. மூன்று ஆஸ்டெரிஸ்க் ( ஷிப்ட்+3 எண்ணுக்கான கீ ) கீ அழுத்தி என்டர் தட்டினால், புள்ளிகள் வைத்த கோடு கிடைக்கும்.

4. டில்டே (கீ போர்டில் முதல் கீ ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி என்டர் அழுத்த, நெளிவு கோடு கிடைக்கும்.

5. ஈக்குவல் என்னும் சமம் என்பதற்கான கீ (பேக் ஸ்பேஸ் கீக்கு முந்தைய கீ, ஷிப்ட் கீயுடன்) மூன்று முறை அழுத்தி, என்டர் அழுத்த, சிறிய அளவிலான இரட்டைக் கோடு கிடைக்கும்.

இது போல கோடுகள் அமைவது, வேர்ட் தொகுப்பில் மாறா நிலையில் நமக்குத் தரப்பட்டுள்ளது.  ஆனால் ஒரு சிலருக்கு இந்த கோடு, தானாக அமைவது பிடிக்காது.

ஏனென்றால், சிறிய அளவில் ஏழே ஏழு ஹைபன்களை அடுத்து அடுத்து போட விரும்பினால், போட முடியாது. அது வேர்டால், தானாக முழு நீளக் கோடாக மாற்றிவிடும்.

அப்படியானல் என்ன செய்திடலாம்? வேர்ட் தொகுப்பில் இதனை நிறுத்துவதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. வேர்ட் 2003 தொகுப்பில்:

டூல்ஸ் மெனுவிலிருந்து ஆட்டோ கரெக்ட் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.  கிடைக்கும் விண்டோவில் AutoFormat As You Type  என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக் கவும். பின்னர் Apply As You Type என்ற பிரிவில் Border Lines  என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

2. வேர்ட் 2007:

முதலில் ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Word Options  என்பதில் கிளிக் செய்திடுக. அதன்பின் AutoCorrect Options   என்ற பிரிவில், AutoCorrect Options என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.

பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type   என்ற பிரிவில் Border Lines என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. வேர்ட் 2010 தொகுப்பில்:

File  டேப்பில் Help என்பதன் கீழ் Options   என்பதில் கிளிக் செய்திடவும்.

இதன் பின், கிடைக்கும் பிரிவுகளில், இடது பக்கம் கிடைக்கும் பிரிவுகளில், Proofing   என்பதில் கிளிக் செய்திடவும். அதன்பின் AutoCorrect Options  என்ற பிரிவில், AutoCorrect Options   என்பதில் கிளிக் ஏற்படுத்தவும்.

பின்னர் AutoFormat As You Type என்ற டேப்பில், Apply As You Type  என்ற பிரிவில் Border Lines  என்பதன் முன் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும்.  பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டாகுமெண்ட்டில்  வெப் டெக்ஸ்ட் ஒட்ட

இணைய தளத்திலிருந்து டெக்ஸ்ட் எடுத்து வேர்டில் ஒட்டுகையில் நமக்குத் தேவையில்லாத பார்மட்டிங், பாண்ட் மற்றும் டெக்ஸ்ட் அருகே உள்ள சிறிய விளம்பரக் கட்டங்கள் ஆகியவையும் ஒட்டப்படும். இது பல வேளைகளில் எரிச்சல் தரும் விஷயம் ஆகும். ஏனென்றால் நாம் டெக்ஸ்ட் மட்டும் வைத்துக் கொள்ள விருப்பப்பட்டால் தேவையற்ற இந்த அனைத்து சங்கதிகளையும் ஒவ்வொன்றாக நீக்க வேண்டியுள்ளது. இதனால் காலம் விரயமாகிறது. 

இதற்குப் பதிலாக Edit   மெனு சென்று அதில் Paste Special  என்னும் பிரிவைத் தேர்ந்தெடுத்து  மீண்டும் அதில் Unformatted Text  கிளிக் செய்து அதன் பின் வெப் சைட்டிலிருந்து காப்பி செய்ததை பேஸ்ட் செய்தால் நீங்கள் திட்டமிடுகிற மாதிரி வெறும் டெக்ஸ்ட் மட்டும் நமக்குக் கிடைக்கும்.

உங்கள் ப்ளோக்கின் (Blog) மதிப்பை அறிய.......


உங்கள் வலைப்பதிவின், இணையத்தின் மதிப்பை அறிய http://bizinformation.org/ என்னும் தளம் உதவுகிறது இங்கு சென்று உங்கள வலைமுகவரியை உள்ளீடு செய்தால்....

வலையின் மதிப்பீடு
நாள்தோறும் பார்வையிடப்படும் பக்கங்கள்
பார்வையாளர் எண்ணிக்கை
மொத்த பக்கங்கள் எனப் பல விவரங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது

இலவச நூல்கள் இணையத்தில் கிடைக்கிறது


கல்வி கற்கும் மாணவர்களுக்கு இணையத்தில் தகவல்களுடன், நூல்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவ்வகையில் அண்மையில்  தளம் ஒன்றைப்  பார்க்க நேர்ந்தது.  அதன் முகவரி: http://sciencebooksonline.info.  . இந்த தளம் சென்றால், இதன் இடது பக்கம்  உள்ள பிரிவில்  Astronomy, Biology, Chemistry, Computer science, Earth sciences, Engineering, Mathematics, Medicine  மற்றும்  Physics  என்ற பிரிவுகள் காணப்படுகின்றன.

எந்த பிரிவில் நூல்கள் வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்திடலாம். அந்த பிரிவில் உள்ள நூல்கள் பட்டியலிடப்படுகின்றன. இதில் நமக்கு வேண்டிய நூலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம். சில நூல்கள், ஆன்லைனிலேயே படிக்கக் கிடைக்கின்றன.  பெரும்பாலான நூல்கள் பி.டி.எப். பைலாகக் கிடைக்கின்றன. இவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்தால், குறிப்பிட்ட நூல்களை கம்ப்யூட்டரில் சேவ் செய்வதற்கான விண்டோ கிடைக்கும். சேவ் செய்து பின்னர் படிக்கலாம். தேவைப்பட்ட பக்கங்களை அச்செடுத்தும் வைத்துக் கொள்ளலாம்.

சனி, 30 அக்டோபர், 2010

ஆங்கிலத்தில் எழுத உதவும் இணையதளம்




ஆங்கிலத்தில் அதிவேகமாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து ஆனால் அதற்கு ஈடு கொடுக்கக் கூடிய ஆங்கில புலமை இல்லையே என்ற ஆதங்கமும் இருந்தால் கவலையே வேண்டாம். அழகான ஆங்கிலத்தில் டைப் செய்ய உதவும் இணைய சேவை ஒன்று இருக்கிறது. ஏஐ டைப் என்னும் இந்த சேவை சுலபமாக, வேகமாக, சிறப்பாக டைப் செய்ய உதவுகிறது.

அடிப்படையில் இந்த சேவையானது கம்ப்யூட்டரில் டைப் செய்ய உதவும் நோட்பேட் அல்லது வேர்டுபேட் போலதான். ஆனால் இதில் டைப் செய்யத் துவங்கும் போதுதான் இதன் மகத்துவமே தெரியும். டைப் செய்பவர்கள் முழுவதும் டைப் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் டைப் செய்யத் துவங்கும் போதே அந்த சொல் என்னவாக இருக்கும் என்று காட்டப்பட்டு விடுகிறது. சரியான சொல் என்னும் பட்சத்தில் அதனை கிளிக் செய்தாலே போதும். கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேடலுக்கான சொல்லை டைப் செய்ய முற்படும் போதே இந்த சொல் தானா என்று பரிந்துரைக்கப்படுகிறது அல்லவா? அதே போல இந்த டைபிங் சேவையும் முன்கூட்டியே வார்த்தைகளை பரிந்துரைக்கிறது. வார்த்தைகள் மட்டுமல்ல, பல நேரங்களில் முழு சொற்றொடரையுமே பரிந்துரைக் கிறது.

உதாரணத்திற்கு கடிதம் எழுதுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். மதிப்பிற்குரிய ஐயா என்று துவங்கியதுமே கடிதத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு முழு சொற்றொடரும் திரையில் தோன்றும். இதன் காரணமாக நாம் நினைத்ததைவிட வேகமாக டைப் செய்து விடலாம். அதை விட முக்கியமாக இலக்கண பிழையின்றி டைப் செய்யலாம்.

வாசகங்களாகவே பரிந்துரைக்கப்படுவதால் சரியான வரியை தேர்வு செய்து கொண்டாலே போதும். திஸ் வருமா தட் போட வேண்டுமா என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருக்க வேண்டாம்.

அதே போல வார்த்தைகளை பிழையின்றியும் தேர்வு செய்து கொள்ளலாம். டைப் செய்து முடித்த பின் பிழைத் திருத்தியை பயன்படுத்தி சரி பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அடிக்கும் போதே சரியானதாக தானே தேர்வாகிறது. எழுத்து பிழையும் இல்லை, இலக்கணப் பிழையும் இல்லை என்ற நம்பிக்கையோடு சொல்ல வந்த விஷயத்தில் தெம்பாக கவனம் செலுத்தலாம். அதே போல ஏதாவது சொல்லில் சந்தேகம் இருந்தாலும் அதனை சரி பார்த்துக் கொள்ளலாம். அது மட்டுமா டைப் செய்பவரின் தேவை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப முதலிலேயே பல்வேறு அம்சங்களை நிர்ணயித்து கொள்ள முடியும். எழுத்து நடையையும் கூட தேர்வு செய்வது சாத்தியம். அலுவல் நிமித்தமான நடையா, சட்ட ரீதியான மொழியா, இளமை துள்ளலான வார்த்தைகளா என்றெல்லாம் கூட தீர்மானிக்க முடிவது உண்மையிலேயே சூப்பர். எல்லாவற்றையும் விட முக்கியமாக எழுதும் போது எந்த விதத்திலும் குறிக்கீடாக அமையாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

செயற்கை அறிவு என்று சொல்லப்படும் அர்டிபிஷியல் இன்டலிஜனஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையானது எழுதப்படும் விஷயத்தின் அர்த்தத்தை உணர்ந்து வார்த்தைகள் மற்றும் வாசகங்களை பரிந்துரைப்பதால் இதனை பயன்படுத்தும் போது புதிய சொற்களை கற்றுக் கொண்டு ஒருவரின் சொற் வங்கியை வளமாக்கி கொள்வதும் சாத்தியமே. ஆங்கிலத்தில் அதிக பரிட்சயம் இல்லாமல் அடிப்படை விஷயம் மற்றும் அறிந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் எழுத்து மூலமாக தொடர்பு கொள்ள இந்த சேவை மிகவும் உதவும்.

இந்த சேவையை அவுட்லுக் இமெயில் மற்றும் நோட்பேட், வேர்டுபேடிலும் இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையில் மொழிபெயர்ப்பு வசதியும் இருப்பது கூடுதல் சிறப்பு. டைப் செய்யப்பட்ட வரிகளை தாய்மொழியில் மாற்றிக் கொண்டு பொருளும் நடையும் சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம்.

இப்போதைக்கு 13 மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு வசதி இணைக்கப்பட்டுள்ளது. டைப் செய்வது இதை விட சுலபமாக இருக்க முடியாது என்று ஏ ஐ டைப் சொல்லிக் கொள்வது உண்மைதான் என்பது இதனை பயன்படுத்தி பார்த்தால் புரியும்.

http://www.aitype.com/

வெள்ளி, 29 அக்டோபர், 2010

இமெயில் குரூப் உருவாக்கலாமா!






நாம் அடிக்கடி சில இமெயில்களை குறிப்பிட்ட குழு நண்பர்களுக்கு அனுப்ப வேண்டியதிருக்கும். இந்த குழுக்கள் பல அடிப்படையில் அமையும். தனிப்பட்டமுறையில் நண்பர்கள் குழு, அலுவலகப் பணியாளர்கள் குழு, குறிப்பிட்ட
செயல்பாட்டிற்கு என தற்காலிகமாக
அமைக்கப்படும் குழு, வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இணையம் வழி இணைந்த குழு என பலவகைகளில் நாம் நண்பர்களைக் கொண்டிருப்போம்.

இவர்களின் இமெயில் முகவரிகள் எல்லாம் நம் இமெயில் 
கிளையண்ட் புரோகிராமில் இருக்கும்.இவர்களுக்கு குறிப்பிட்ட தகவல் கொண்ட இமெயில் கடிதங்களை அனுப்ப ஒவ்வொரு முகவரியாகத் தேடித் தேடி அமைக்க வேண்டியதில்லை. குழுவாக ஒரு பெயரில் அமைத்து அந்த குழுவின் பெயரை மட்டும் ஒரே ஒரு மெயில் முகவரியில் அமைத்தால் போதும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் இதனை எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். பெரும்பாலும் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் இமெயில் வசதி தரும் இணைய தளங்களும் இந்த குழு அமைக்கும் வழிகளை ஒரே மாதிரியாகத்தான் கொண்டிருக்கின்றன. பெயர்களில் வேண்டுமானால் சிறிய அளவில் மாற்றங்கள் இருக்கலாம்.


அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் அதனைத் திறந்து Tools என்பதனைக் கிளிக் செய்திடவும். பின்னர் உங்கள் Address Book ஐத் திறக்கவும். அதில் New என்னும் ஐகானில் கிளிக் செய்திடவும். பின் New Group என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த குரூப்பிற்கு அதன் அமைப்பின் தன்மைக்கேற்ப ஒரு பெயர்கொடுக்கவும். அதன் பின்னர் உறுப்பினர்களின் இமெயில் முகவரிகளை இந்த குரூப்பில் அமைக்க வேண்டும் அல்லவா? இதற்கு Select Members என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் அட்ரஸ்புக்கில் உள்ள அனைத்து பெயர்களும் முகவரிகளும் கிடைக்கும். எந்த முகவரிகளெல்லாம் அதில் இருக்க வேண்டுமோ அதனை எல்லாம் ஹை லைட் செய்திடவும். ஒவ்வொன்றையும் ஹைலைட் செய்தவுடன் Select  பட்டனைத் தட்டவும். அனைத்தையும் மொத்தமாகத் தேர்ந்தெடுக்க ஷிப்ட் பட்டனையும் மவுஸ் கிளிக்கையும் பயன்படுத்தலாம். இவ்வாறு பிரித்து குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தவுடன்அனைத்து பெயர்களும் Members பேனலில் இடம் பெறும். அடுத்து OK ஐ இரு முறை கிளிக் செய்திடவும்.
 

இப்போது குரூப் தயாராகிவிட்டதா? இனி இதற்கு எப்படி மெயில்களை இந்த குரூப்பெயரைப் பயன்படுத்தி இமெயில் அனுப்புவது என்று பார்ப்போம். புதிய மெசேஜ் அனுப்ப வழக்கம்போல புதிய மெசேஜ்க்கான மெனுவினைக் கிளிக் செய்து பின் Tools, Select Recipients ஆகியவற்றைக் கிளிக் செய்திடவும். இப்போது அனைத்து முகவரிகளும் மற்றும் நீங்கள் ஏற்படுத்திய குரூப் முகவரியும் காட்டப்படும். இதில் எந்த குரூப்பிற்குஅனுப்ப போகிறோமோ அந்த குரூப்பின் பெயரை ஹைலைட் செய்திடவும். இனி To:பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்திட்டால் மெயில் மெசேஜ்எடுக்கத் தயாராகும் விண்டோவில் பெறுநர் முகவரியில் இந்த குரூப்பின் பெயர் காணப்படும்.


வழக்கம்போல் காணப்படும் இமெயில் முகவரி இருக்காது. அல்லது அந்த குரூப்பில் இணைக்கப்பட்ட அனைத்து முகவரிகளும் காட்டப்பட மாட்டாது.அந்த குழுவின் பெயரிலேயே அவை பதியப்பட்டு இருக்கும். இதன் பின்மெசேஜுக்கான செய்தியை டைப் செய்து வழக்கம்போல அனுப்பும் வகையில் அனுப்பலாம். அனைத்து உறுப்பினர்களுக்கும் அந்த மெயில் செல்லும். எந்த உறுப்பினராவது ரிப்ளை பட்டனைத் தட்டி பதில் கடிதம் அனுப்பினாலும் அந்த பதில் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்படும். இன்றே முதலில் உங்கள் குடும்ப நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான குழுவினை அமைத்து அனுப்பி பாருங்களேன்!

எனது வலைபூவிற்கு வருகை தந்ததிக்கு நன்றி

வியாழன், 28 அக்டோபர், 2010

பட்டய மற்றும் பட்ட படிப்புகள் - இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தில்.....

தமிழக அரசின் முயற்சியால் சென்னையில் அமைந்துவிட்ட இந்திய கடல்வாழ் பல்கலைகழகத்தின் பொது நுழைவு தேர்வு பற்றிய அறிவிப்பு அந்த பல்கலையின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

http://www.imu.tn.nic.in/

பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான முதல் பேட்ச். இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டாலே அரசு வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை. இந்த அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள மாணவர்கள் தயங்கவேண்டாம். படிப்புக்கான தேர்வு தகுதிகள், உடல் தகுதி தேர்வுகள், கட்டண விவரம்  அனைத்தும் இணைய தளத்திலேயே உள்ளது.

புதன், 27 அக்டோபர், 2010

கம்ப்யூட்டரை சட்டௌன் பண்ண இலகுவான வழி

நேரத்தை செட் பண்ணி டீ.வியை தானாகவே ஓப் பண்ண செய்வதை போல் எமது கணனியையும் நேரத்தை குறிப்பிட்டு  தானாகவே ஒப் பண்ணுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

முதல் நீங்கள் ஸ்டாட் சென்று ரன் என்ற கட்டளையை தெரிவு செய்யுங்கள்.




அதன்பின்பு அவ் பாரில் கணனி 10:55 க்கு ஓப் ஆக வேண்டுமென்றால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
at 10:55 shutdown -s

அதேபோலவே நீங்கள் அதை நீக்க விரும்பினால் பின்வருமாறு டைப் பண்ணுங்கள்.
shutdown -a

Auto shutdown computer using run command

உங்கள் கணனி நெட்வேர்க் பண்ணியிருப்பின் பல கணனிகளுடன் அதற்கு கீழ்கண்டவாறு டைப் பண்ணுங்கள்.
shutdown –s –m\\computername –t60

computername –t60 
என்ற இடத்தில் கணனி நெட்வேர்க் பெயரை இடுங்கள்.

இதையையே இன்னுமொரு வழிமுறையில் செய்ய முடியும்.
அது எவ்வாறு என்பதை பார்ப்போம்

டெஸ்க்டொப்பில் ரைட்கிளிக் பண்ணி New=>shortcuts


அதன்பின்பு அவ் வின்டோவில் 
“Type the location of the shortcut”
 இவ்வாறு காணப்படும், 
அதை நீக்கி விட்டு 
shutdown -s -t 3600
 என்று டைப் பண்ணுங்கள்.




3600 ஆனது செக்கன்களை குறிக்கிறது.ஆதாவது 3600 செக்கன் 60 நிமிடம் என்ற கணக்கில்.உங்களுக்கு 30 நிமிடம் 1 2  மணித்தியாலயம் என்றும் கொடுக்க முடியும்.

உங்களுக்கு இதை நீக்க வேண்டும் என்றால் இன்னுமொறு சாட்கட் ஒன்றை நிறுவி அதில் shutdown -a என்று டைப் பண்ணுங்கள்

செவ்வாய், 26 அக்டோபர், 2010

மின்னஞ்சல் கணக்கு உருவாக்கலாம் @tamil.com

         
இனைய உலகில் கூகுள் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றது. கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புது வசதிகள் ஏற்படுத்தினாலும்  Yahoo, Hotmail பயனாளர்கள் ஜீமெயில் பக்கம் வருவதாயில்லை. ஆனாலும் ஜிமெயில் முன்னிலையில் இருந்துகொண்டு சிறப்பான சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது.

     நாம் இப்போது பார்க்கப் போவது Tamil.com என்ற டொமைனின் கீழ் ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்குவது பற்றி. அனைவருக்கும் தங்கள் பெயரின் பின்னால் @tamil.com என்று வந்தால் மிகவும் நனறாக இருக்கும். இதனை எமக்கு Mail.com என்ற தளமே வழங்குகின்றது. இத்தளம் 50 க்கும் மேற்பட்ட பெயர்களின் கீழ் மின்னஞ்சல் சேவையை வழங்குகின்றது. அனைத்து கணக்கிற்கும் நுழைவாயில் Mail.com தான்!

Tamil.com  மின்னஞ்சல் உருவாக்க Mail.com சென்று Sign Up என்பதை Click செய்யுங்கள். பின் படிவத்தை பூர்த்தி செய்து Choose Domain என்பதில் Hobbies என்ற பிரிவின் கீழ் Tamil.com காணப்படும் அதனை தெரிவுசெய்யவும். பின் Check பட்டனை அழுத்த Check செய்து உங்களுக்கு கிடைக்கக் கூடியதாக இருந்தால் Available என்று காட்டப்படும். கிடைக்காவிடில் வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்படும். அதில் ஒன்றைத் தெரிவுசெய்யலாம். அல்லது வேறு பெயர்களைக் கொடுத்து முயற்சி செய்யுங்கள். உங்கள் பெயரோடு இலக்கங்களை சேர்த்தும் பார்க்கலாம். இனி தயார்!

   இக்கணக்கை நிரந்தமாக பயன்படுத்த ஒன்றை வழங்கிவிடுங்கள். மாதம் ஒருமுறையாவது பாவிக்காவிட்டால் கணக்கு மூடப்படும். சில நாட்களின் பின் மீண்டும் முயற்சி செய்தால் அக்கணக்கை திரும்பப்பெறலாம்.

திங்கள், 25 அக்டோபர், 2010

இலவசமாக செல்போன்களை பெற ஒரு அறிய வாய்ப்பு

Apple iPhone & Blackberry & Nokia & Sony Ericsson & Motorola & Samsung போன்ற செல்போன்களை இலவசமாக பெற நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் நண்பர்களை இந்த இணையத்தளத்தில் சேர்த்து வைக்க வேனடியதுதான் அல்லது இந்த இணையத்தளத்தில் இருக்கும் இலவசமாக Offer-களை பயன்படுத்தினாள் போதும் நாம் செல்போன்களை இலவசமாக கண்டிப்பாக பெற முடியும்.

இவர்கள் செல்போன்கள் மட்டுமின்றி Games Consoles & HDTVs & Mac/PC & MP3 Players போன்றவற்றையும் நமக்கு இலவசமாக வழங்குகிறார்கள். உங்களுக்கு தேவையானவற்றை தேர்ந்தெடுத்து இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள்.





இங்கு சென்று நீங்கள் உங்கள் Offer-ய் பதிவு செய்து கொண்டு உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள்.

கண்ணை (eye) பத்தி அறிவோம்..... (பாகம்-3)


சாதாரண பார்வை
படத்தில் காட்டியுள்ளபடி, இணையான திசையில் தொலைவிலுள்ள பொருள்களிலிருந்து செல்லும் ஒளி சிலியரி தசை முழுவதுமாக தளர்ந்த நிலையில் இருக்கும்போது, ரெட்டினாவில் குவிக்கப்படுகிறது. அதாவது சாதாரண கண்ணால் தொலைவிலுள்ள அனைத்து பொருட்களையும் அதன் சிலியரி தசைகள் தளர்வாக இருக்கும்போது, தெளிவாக காண முடியும். இருப்பினும் அருகிலுள்ள பொருட்களை பார்க்க சிலியரி தசை சுருங்குகிறது.


கண்ணில் ஏற்படும் நோய்கள்





தூரப்பார்வை:

இந்நோய் உள்ளவர்களால் தூரத்தில் உள்ளவைகளை தெளிவாக காண முடியும்; ஆனால் அருகில் உள்ளவைகளை தெளிவாக பார்க்க முடியாது. இந்த நிலையில் படத்தில் காட்டியுள்ளபடி, இணையான ஒளிக்கதிர்களை தளர்ந்துள்ள லென்ஸ் அமைப்பால் போதுமான அளவு வளைக்க முடியவில்லை. இதை சரி செய்ய சிலியரி தசை லென்சின் பலத்தை அதிகரிக்க கட்டாயம் சுருங்க வேண்டும். அகோமொடேசன் செயல்முறையை பயன்படுத்தி, ஒரு தூரப்பார்வை உள்ள நபர்தூரத்திலுள்ள பொருட்களை பார்க்க முடியும். நபருக்கு சிலியரி தசையின் சிறிய அளவு பலத்தை மட்டும் பயன்படுத்தினாலும், அவரால் தூரத்திலுள்ள பொருட்களை காண முடியும். சிலியரி த்சையால் சுருங்க முடிந்த வரை அவரால் கண்ணுக்கு நெருக்கமான பொருட்களை காண முடியும். ஆனால் வயதாகும்போது லென்ஸ் மிகவும் பலவீனமாவதால், ஒரு தூரப்பார்வை உள்ளவரால் தூரத்தில் உள்ள பொருட்களையும் போதுமான அளவு தெளிவாக காண முடியவில்லை.

கிட்டப்பார்வை:

கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு படத்தில் உள்ளபடி சிலியரி தசை ஓய்வாக இருக்கும்போது ஒளிக்கதிர்கள் ரெடினாவில் குவிகின்றன. இதற்கு காரணம் பெரியதாக இருக்கும் கண்ணாக இருக்கலாம் ஆனால் ஒளி அதிகமாக விலக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இதை சரி செய்ய கண்ணால் எந்த செயல்பாட்டை தூரப்பார்வையை போல் செய்ய முடியாது. ஆனால் கிட்டப்பார்வை உள்ளவரால் நெருங்கிய பொருட்களை அகோமெடேசன் முறையை பயன்படுத்தி பார்க்க முடிகிறது.

கிட்டப்பார்வை வாழ்க்கை முறையாலும் (நெருக்கமாக: தொலைக்காட்சி பார்த்தல், கணிப்பொறியில் வேலை செய்தல், புத்தகம் படித்தல் போன்றவை) தூரப்பார்வை மரபியல் ரீதியாகவும் ஏற்படலாம்.

லென்ஸ்களை பயன்படுத்தி கிட்டாபார்வை மற்றும் தூரப்பார்வையை சரி செய்தல்.

சாதாரண கண்ணில் ஒளிக்கதிர்கள் ஒரு குழி லென்ஸ் மூலம் செல்வதை நாம் அறிவோம். எனவே கிட்டப்பாரவையில் போன்று, அதிகமாக ஒளிவிலகல் தன்மை இருந்தால் அதை சரி செய்ய படத்தில் உள்ளது போல் ஒரு குழி லென்சை முன்னால் வைத்து சரி செய்யப்படுகிறது. அதேபோல் தூரப்பார்வையில் உள்ளது போல பலவீனமான லென்ஸ் அமைப்பை சரி செய்ய படத்தில் உள்ளது போல் ஒரு குவி லென்ஸ் முன்னால் வைக்கப்படுகிறது.



சிதறல் பார்வை

சிதறல் பார்வை என்பது முட்டை வடிவ லென்ஸ் மற்றும் கார்னியா அமைப்பினால் ஏற்படுகிறது. இதனால் ஒளி ஒரு பக்கம் அதிகமாக விலக்கப்படுகிறது. படத்தில் காண்பித்துள்ளபடி ஒளி பல இடங்களில் குவிக்கப்படுவதால் பார்ப்பவருக்கு பார்வை பல இடங்களில் கூவிக்கப்படுவதால் பார்வை தெளிவற்று ஏற்படுகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் கொஞ்சம் சிதறல் பார்வை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் உள்ள சிதறல் பார்வையால் பார்வைக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அகோமடேசன் முறையால் இப்பிரச்சினையை கண்ணால் எப்போது சரி செய்ய முடியாது ஏனெனில் ஒளி ஒவ்வொரு தளங்களிலும் வெவ்வேறு கோணத்தில் குவிக்கப்படுகிறது
சிதறல் பார்வை உள்ளவருக்கு கண்பார்வை மங்கலாகம், கண்வலி, தலைவலி போன்றவையும் ஏற்படுகிறது.

சிதறல் பார்வை ஏற்படுவதற்கான காரணம் இதுவரை தெளிவாக கண்டறியப்படவில்லை. ஆனால் கண்ணில் ஏற்படும் அடிகள், அறுவை சிகிச்சைகளால் ஏற்படலாம். சிதறல் பார்வையை உருளைவடிவ லென்ஸ்கள் மூலம் சரி செய்யலாம்


கண்புரை

கண்புரை எனபது மிக பரவலான கண் நோய் ஆகும் கண்ணின் லென்சின் மேல் பகுதியில் ஏற்படும் மெல்லிய படல தொகுப்புகள் ஆகும். உடல் வழக்கமாக ஒரு இடத்தில் காயம் ஏற்படும்போது அந்த இடத்தை ஆற வைக்கிறது. அப்போது அந்த இடத்தில் தழும்புகள் ஏற்படுகிறது. இப்படித்தான் கண்ணில் ஏற்படும் காயங்கள் ஆரி த்ழும்பாகி கண்புரை ஆகின்றது. இதனால் கண்பார்வை பிரச்சினை உண்டாக்கிறது. இது கண்ணில் அறுவைசிகிச்சை மூலம் லென்சை எடுப்பதால் சரி செய்யப்படுகிறது. சிலசமயம் அறுவைசிகிச்சைக்கு பின் லென்ஸ் அணிய வேண்டியிருக்கலாம்.


கிளாக்கோமா

ஆப்டிக் டிஸ்க் என்பது பார்வை நரம்பின் முனை ஆகும்
கிளாக்கோமா பார்வை இழப்பின் மிக பரவலான காரணங்களில் ஒன்றாகும். இந்நோய் கண் உட்பகுதியில் அழுத்தம் மிக அதிகமாவதால் குறிப்பாக 60 முதல் 70 mm Hg வரை அதிகமாவதால் ஏற்படுகிறது. 25 முதல் 30 mm Hg அழுத்தம் நீண்ட காலம் இருந்தாலும் பார்வை இழப்பு ஏற்படலாம். மிக அதிகமான அழுத்தம் சில நாட்கள் அல்லது சில மணி நேரங்களுக்குள்ளே கூட பார்வை இழப்பை உண்டாக்கலாம். அழுத்தம் அதிகரிக்கும்போது, பார்வை நரம்பின் கண்ணிலிருந்து வெளியேறும் இடமான ஆப்டிக் டிஸ்க் பகுதியில் அழுத்தப்படுகிறது. இந்த அழுத்தம் நரம்பு ஓட்டத்தை தடை செய்கிறது. இது அந்த நரம்பு இழைகள் இறப்பதற்கும் காரணமாகலாம். மேலும் இந்த அழுத்தம் கண் இரத்தக் குழாயை அழுத்தலாம்(இதுவும் ஆப்டிக் டிஸ்க் வழியாக நுழைகிறது).

கிளாக்கோமா நீரிழிவு நோய், ஹைப்போதைராடிசம், லுக்கிமியா, சிக்கிள் செல் அனீமியா, ஆர்த்ரைடிஸ் போன்ற நோய் உள்ளவர்களுக்கு ஏற்படலாம். மேலும் ஸ்டீராய்டு பயன்படுத்துபவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கண்ணில் அடிபட்டவர்கள் போன்றவர்களுக்கு கிளாக்கோமா ஏற்பட வாய்ப்பு அதிகமாகும். மரபியல் ரீதியாகவும் கிளாக்கோமா ஏற்படலாம்.


ரெடினல் துண்டிப்பு

ரெட்டினா சில சமயம் துண்டிக்கபடலாம். சில சமயங்களில் இந்த துண்டிப்பு கண்ணில் ஏற்படும் அடியால் அதிகமான திரவம் அல்லது இரத்தம் ரெட்டினா மற்று எபிதீலிய செல்களுக்கு இடையே நிரம்புவதால் ஏற்படலாம். சில சமயம் விட்ரஸ் ஹியூமரில் உள்ள மெல்லிய கொலாஜன் இழைகள் சுருங்கும்போதும் ரெடினா உள்பக்கமாக இழுக்கப்பட்டும் துண்டிக்கப்படலாம்.

ரெடினல் துண்டிப்பு ஏற்பட்டால் ரெடினாவிற்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைந்து செயலிழக்க நேரிடலாம். ரெடினல் துண்டிப்பு ஏற்பட்ட சில நாட்களுக்கு அது இந்த செயலிழப்பை தடுத்து நிறுத்தும். அதற்கு அறுவைசிகிச்சை மூலம் சரி செய்தால் பார்வை இழப்பு தடுக்கப்படும்.

மேக்குலார் டீஜெனரேசன் எனப்படும் நோய் வயதாகும்போது ரெடினாவின் ஒரு பகுதியான மேக்குலாவில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுகிறது இதுவும் பார்வை இழப்பை உண்டாக்குகிறது. தற்போது பார்வை இழப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உடல் பருமன், புகைபிடிக்கும் பழக்கங்கள் போன்றவையால் இந்நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாகிறது. இதன் அறிகுறி நேர்கோடுகள் வளைந்தவை போல் தோன்றுதல், மங்கலான உருவங்கள் போன்றவையாகும்.

மாலைக்கண் நோய்

மாலைக்கண் நோய் விட்டமின் ஏ குறைபாடு உள்ளவருக்கு ஏற்படும். ஏனெனில் விட்டமின் ஏ இல்லாமல், உருவாகும் ரெடினா மற்றும் ருடாப்சின்(குச்சிகள்) நலமில்லாமல் இருக்கும். இந்த நிலை மாலைக்கண் என அழைக்கப்படுவதற்கான காரணம், விட்டமின் ஏ குறைவாக உள்ளவகளுக்கு இரவில் வரும் வெளிச்சம் போதுஆனதாக இருக்காது. மாலைக்கண் உடனே ஏற்பட்டு விடாது. மாதக்கணக்கில் விட்டமின் ஏ உடலுக்கு கிடைக்காவிட்டால்தான் அது ஏற்படும். ஏனெனில் வழக்கமாக கல்லீரலில் விட்டமின் ஏ சேகரமாகி இருக்கும். மாலைக்கண் நோய் உள்ளவருக்கு சிலசமயங்களில் விட்டமின் ஏ ஊசி போடும்போது அது 1 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கூட சரியாகலாம்.

நிறக்குருடு

நிறக்குருடு முழுமையானதாகவும் ஏற்படலாம், பகுதியாகவும் ஏற்படலாம். நிறக்குருடு பெரும்பாலும் மரபுவழியாக ஏற்பட்டாலும், சிலசமயம் வயதாகும்போது, ரெட்டினா மற்றும் பார்வை நரம்பில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஏற்படலாம். சிலசமயம் சில மருந்துகள் கூட நிறக்குருடை ஏற்படுத்தலாம். குடிப்பழக்கம், புகைபிடித்தல் போன்றவையும் நிறக்குருடை ஏற்படுத்தலாம். கண்புரை கூட நிறங்களை மங்கலாக காட்டும்.

முழுமையான நிறக்குருடு உள்ளவருக்கு எந்த நிறங்களும் தெரியாது கருப்பு-வெள்ளை மட்டுமே தெரியும். இது மிகவும் அரிதானது.









சிவப்பு-பச்சை நிறக்குருடு.

கண்ணில் கூம்புகள் நிறங்களை அறிய காரணமாகிறது. இதில் மூன்று வகை கூம்புகள் உள்ளன, அதாவது சிவப்பு, பச்சை மற்றும் நீலம். மற்ற நிறங்கள் இவைகளின் கலவையால் தோன்றுகின்றன. மேலே உள்ள படத்தில் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் உள்ளன. இந்த நிறங்களை அறிய சிவப்பு மற்றும் பச்சை கூம்புகள் உதவுகின்றன. இவை இரண்டு கூம்புகள் அல்லது ஏதாவது ஒன்று இல்லாவிட்டால், ஒருவரா; மேற்கண்ட நான்கு நிறங்களை பிரித்தறிய முடியாது. நிறக்குருடு ஆண்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனெனில் எக்ஸ்(x) குரோமோசோம் தான் இந்த கூம்புகள் உருவாக காரணம். எனவே பெண்களில் உள்ள இரண்டு எக்ஸ் குரோமோசோம்களில் ஏதாவது ஒன்றில் நல்ல ஜீன் இருக்கும். ஆனால் ஆண்களுக்கு ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் உள்ளதால் அதில் கூம்புகளுக்கான ஜீன் சேதமாகி இருந்தால் அவருக்கு நிச்சயம் நிறக்குருடு ஏற்படும். மேலும் எக்ஸ் குரோமோசோம் தாயிலிருந்து பெறப்படுவதால் நிறக்குருடு தாயிலிருந்து மகனுக்கு பரிமாற்றப்படுகிறது.

நீல நிறக்குருடு.

மிக அரிதாகவே நீல நிற கூம்புகள் இல்லாமல் இருக்கின்றன. இதுவும் மரவழியாக பரிமாற்றப்படுகிறது.

நிறங்கள் சோதனை.

மேலே உள்ள முதல் படத்தில் நிறக்குருடு இல்லாதவரால் “74” என்ற எண்ணை படிக்க முடியும். ஆனால் சிவப்பு-பச்சை நிறக்குருடு உள்ளவருக்கு “21” என்ற எண்ணே தெரியும். அதேபோல் இரண்டாவது படத்தில் சாதாரணமானவருக்கு “42” என்பது தெரியும். ஆனால் சிவப்பு நிறக்குருடு உள்ளவருக்கு “2” ஆகவும் பச்சை நிறக்குருடுள்ளவருக்கு “4” என்பது மட்டும் தெரியும்.

ஹார்னர் சிண்ட்ரோம்

சிலசமயம் கண்ணுக்கு செல்லும் சிம்பதடிக் நரம்புகளில்(தானியங்கி நரம்பு மண்டத்தின் ஒரு பிரிவு) இடையூறு ஏற்படலாம். இந்த இடையூறு கழுத்து பக்க சிம்பதடிக் நரம்பு இணைப்புகளில் அடிக்கடி ஏற்படும். இது ஹார்னர் சிண்ட்ரோம் எனப்படும் நிலையை உண்டாக்குகிறது. பாவைக்கு செல்லும் சிம்பதடிக் நரம்பின் இடையூறால், பாவை சிறியதாக சுருங்கிய நிலையிலேயே இருக்கும். இரண்டாவதாக மேல் கண் இமை தளர்ந்து விடும். இதனால் மேல் இமையை விரிவாக திறக்க முடியாது. மூன்றாவதாக பாதிப்பு கண்ணின் பக்கமாக முகம் மற்றும் தலை பகுதியில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைந்த நிலையில் இருக்கும். நான்காவதாக அந்த பகுதியில் வியர்வை ஏற்படாது.
கழுத்து பகுதியில் ஏற்படும் விபத்துகளால் இந்நோய் ஏற்படலாம். மூளையில் ஏற்படும் சில பிரச்சினைகளாலும் இந்நோய் ஏற்படுகிறது.

கண்ணை (eye) பத்தி அறிவோம்..... (பாகம்-2)


கண்பார்வை  :

ஒரு பொருளின் மீது படும் ஒளி பிரபதிலிக்கப்படுகிறது. இந்த ஒளி கண்ணில் லென்ஸ் வழியே ஊடுருவிச் சென்று ரெடினாவில் (விழித்திரை) தலைகீழ் பிம்பமாக விழுகிறது. பின் அது நரம்பு வழியே செய்திகளாக மூளைக்கு செல்கிறது. மூளை அந்த பொருளை பார்த்து உணர்கிறது.

கண் ஒரு கேமரா:
 
கண் ஒரு ஒளிப்படக்கலை கேமரா போலவே செயல்படுகிறது. இதில் ஒரு லென்ஸ் அமைப்பு உள்ளது. துளை (பாவை) உள்ளது. மேலும் ஃபிலிமாக ரெடினா செயல்படுகிறது.




மேலே படத்தில் படம் 1-ல் பாவை துளை சிறியதாக உள்ளது படம் 2-ல் பாவை துளை பெரியதாக உள்ளது. இரண்டு படங்களிலும் கண்களுக்கு முன்னால் இரண்டு சிறிய ஒளி மூலங்கள் உள்ளன. அந்த ஒளி பாவை துளை வழியே சென்று ரெடினாவில் விழுகிறது. இரண்டு படங்களிலும் ரெடினா மிகச்சரியான குவியத்தில் பார்க்கிறது. படம் 1ல் ரெடினா முன்னே அல்லது பின்னே நகர்ந்தால் அளவில் பெரிதான மாறுபாடு ஏற்படாது. ஆனால் படம் 2ல் ரெடினா நகர்ந்தால்,  அளவு அதிகரித்து ஒரு மங்கலான வட்டமாகி விடும். அதாவது முதல் படத்தில் இரண்டாவது படத்தை விட ஆழமான குவியம் உள்ளது. இதன் காரணத்திலாயே படம் 1ல் பாவைத் துளை சிறியதாகவும் படம் 2ல் பாவைத் துளை பெரியதாகவும் உள்ளது.

பார்வைக் கூர்மை
 
மனித கண்ணிற்கான சாதாரண பார்வை திறனை கண்டறிய ஸ்னெல்லன் சார்ட் (படத்தை பார்க்க) பயன்படுகிறது.



இதில் ஒரே அளவிலான எழுத்துக்கள் 20 அடி தூரத்தில் உள்ள நபரிடம் காண்பிக்கப்படுகின்றன. 20/20 பார்வை உள்ளவரே சாதாரண பார்வை உடையவராக க்ருதப்படுவார். அவர் அந்த எழுத்துக்களை 200 அடி தூரத்தில் பார்த்தால் அவரின் பார்வை 20/200 ஆகும். இதை காணவே 20 அடி தூரத்தில் வெவ்வேறு அளவிலுள்ள எழுத்துக்களை காண்பிக்கின்றனர்.

மெட்ரிக்      ஸ்னெல்லன்
6/3             20/10
6/4.5          20/15
6/6             20/20
6/7.5          20/25
6/9             20/30
6/12           20/40
6/15           20/50
6/30          20/100
6/60          20/200
 
இது ஸ்னெல்லன் சார்டின் பார்த்தப்டி ஒவ்வொரு அளவிற்கு தேவையான தோராயமான லென்ஸ் திருத்தம் ஆகும்:

ஸ்னெல்லன்   கணக்கிடப்பட்ட அளவு

20/10          ப்ளேனோ (பூச்சியம்) 
20/15          ப்ளேனோ
20/20         ப்ளேனோ முதல் -0.25 வரை
20/30         -0.50
20/40         -0.75
20/50         -1.00 முதல் -1.25 வரை
20/100        -1.75 முதல் -2.00 வரை
20/200        -2.00 முதல் -2.50 வரை 

டெப்த் பெர்சப்ஷன்
 
ஒரு பொருளின் பரிமாணத்தை கண்டறிவது கண் செய்யும் மற்றொரு வேலையாகும். ஒரு நபர் சாதாரணமாக பொருளின் தூரத்தை மூன்று வழிகளில் கண்டறிகிறார். 1. தெரிந்த பொருள்களின் அளவு. 2. இணையாக நகரும் அமப்பு 3. ஸ்டிரியோப்சிஸ். இந்த திறன் டெப்த் பெர்சப்சன் என அறியப்படுகிறது.


தெரிந்த பொருள்களின் அளவுகள் மூலம் தூரத்தை அறிதல்

6 அடி உயரமுள்ள ஒருவரை காணும்போது, அவர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதை கணக்கிட முடியும். ஏனெனில் ரெடினாவில் பதியும் நபரின் உருவத்தின் அளவை வைத்து மூளை மற்ற பரிமாணங்களை கணக்கிடும்.
 
இணையாக நகர்தல் மூலம் தூரத்தை அறிதல்

ஒருவர் 1 அங்குலம் தூரத்தில் உள்ள ஒரு பொருளை பார்க்கிறாஎ பின் தன் தலையை 1 அங்குலம் பக்கவாட்டி நகர்த்தினால் பொருளும் அவ்வளவு தூரம் ரெடினாவில் நகரும். ஆனால் 200 அடி தூரத்தில் உள்ள பொருள் அதே அளவில் நகராது. இந்த முறையில் ஒரு கண்ணை மூடிக் கொண்டும் நாம் பொருளின் தூரத்தை கணக்கிடலாம்.
 
ஸ்டிரியோப்சிஸ் மூலம் தூரத்தை அறிதல்

மற்றொரு முறை பைனாகுலர் விஷன் ஆகும். ஒரு கண் மற்றொரு கண்ணின் ஒரு பக்கத்தை விட 2 அங்குலங்கள் அதிகமாக உள்லது. எனவே இரண்டு ரெடினாக்களிலும் விழும்  பிம்பம் மாறுபடலாம். உதாரணமாக, மூக்கிற்கு 1 அங்குலம் முன்னால் உள்ள ஒரு பொருளை பார்க்கும் போது அதன் பிம்பம் இடது கண்ணின் இடது பக்கத்திலும் வலது கண்ணின் வலது பக்கத்திலும் விழும் (படத்தை பார்க்க). ஆனால் 20 அடி தூரத்திலுள்ள ஒரு சிறிய பொருளின் பிம்பம் ரெடினாவின் நடுப்பகுயில் விழும். இதன் மூலமாக ஒரு இரு பொருள்களை சார்பு படுத்தி அவற்றிற்கு இடையே உள்ள தூரத்தை அறிகிறார். ஆனால் ஸ்டிரியோப்சிஸ் 50 முதல் 200 அடிக்கு மேல் உதவாது.

கண்ணை (eye) பத்தி அறிவோம்..... (பாகம் 1)

கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கு செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும் உள்ளன.


கண் என்பது இரண்டு திரவங்கள் நிரப்பட்ட ஒரு கோளம் ஆகும். ஆறுதசைகள் அதை இயக்குகின்றன. அவை குறுக்கும் சாய்வுமான தசைகள். கண்ணின் சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. வெளிப்பகுதி விழிவெண்படலம்(ஸ்கிளீரா) என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தினால் ஆனது. இதனாலேயே நம் கண் வெண்மையாக காணப்படுகிறது. கார்னியா அல்லது கருவிழி எனப்படுவது இதன் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள முன்பகுதியாகும். இரண்டாவது அடுக்கு காராய்டு ஆகும். இதில் பல இரத்தக் குழாய்களும் நிறமிகளும் அடங்கியுள்ளன. இது கருப்பு நிறத்தில் ஒளி ஊடுருவாத தன்மையுடன் இருக்கும். மூன்றாவது மற்றும் உள்பக்க அடுக்கான சிலியரி தசை பகுதியில் பல மென் தசைகள் லென்சை ஒரு நிலையில் தாங்கி பிடித்துள்ளன. விழித்திரைப் படலம் என்பது பாவையை சுற்றி அமைந்துள்ள நிறமுள்ள தசையாகும். இது பாவைக்குள் நுழையும் ஒளியின் விட்ட அளவை கட்டுப்படுத்தும். நாம் இருட்டறைக்குள் செல்லும்போது இது திறந்து அதிக வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கிறது. பலமான சூரிய ஒளியில் நாம் இருக்கும்போது சுருங்கி வெளிச்சத்த குறைக்கிறது.

கண்ணின் உள்பக்கம் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்பக்க அறையில் அக்யூவஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இது ஒளியை விலகச் செய்கிறது, கண்ணுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது, மேலும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இது சிலியரி தசையால் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்பக்க அறையில் விட்ரியஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இதுவும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, ஒளியை விலகச் செய்கிறது, மேலும் ரெடினாவையும் லென்சையும் தாங்குகிறது. ரெடினா என்பது கண்ணின் உட்பக்க அடுக்காகும் இதில் ஒளி உணர் செல்கள் உள்ளன. இதில் உள்ள நிறமிகள் அடுக்கு ஒளி திரும்ப பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொள்கின்றன.

இந்த ரெடினாவில் கூம்புகள் மற்றும் குச்சிகள் எனப்படும் நரம்பு செல்களின் அடுக்கு உள்ளது. குச்சிகள் மங்கால வெளிச்சத்திற்கும், கூம்புகள் நிறங்களை கண்டறியவும் பயன்படுகின்றன. இந்த கூம்புகளின் கலவையாலேயே நம்மால் அனைத்து நிறங்களையும் கண்டறிய முடிகிறது. இந்த செல்கள் இணைந்து ஆப்டிக் எனப்படும் பார்வை நரம்பை உண்டாக்குகின்றன. இந்நரம்பு மண்டையோட்டின் கருக்கோள குழியில் பின்புறத்தில் உள்ள ஒரு துளைவழியாக மூளையின் பின் பக்கமாக சென்று மூளையுடன் இணைகின்றன.ரெடினாவின் மையத்தில் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி உள்ளது. அதன் மையத்தில் உள்ள பள்ளம் ஃபோவியா செண்ட்ராலிஸ் என அழைக்கப்படுகிறது இந்த இடமே கூர்மையான பார்வையை உண்டாக்கும் இடமாகும். அதற்கு பக்த்தில் ஆப்டிக் நரம்பு செல்கிறது. ரெடினாவை உற்பத்தி செய்ய விட்டமின் ஏ தேவை. இதனாலேயே விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. அவர்களால் வெளிச்சம் குறைவான நேரத்தில் பார்க்க முடியாது.

அகொமடேஷன்
இளைஞர்களுக்கு லென்ஸ் உறுதியான ஒளி ஊடுருவும் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். லென்ஸ் தளர்ந்த நிலையில் இருக்கும்போது அது ஏறக்குறைய கோளவடிவில் இருக்கும். படத்தில் காண்பித்துள்ளவாரூ சுமார் 70 நிலைநிறுத்தும் தசைநார்கள் லென்சை கருக்கோளத்திற்க்கு சற்று வெளியே நிற்கும்படி பிடித்துக் கொள்கின்றன. மேலும் பல தசைநார்களும் சிலியரி தசைகளும் லென்சை சரியான நிலையில் நிலைநிறுத்துகின்றன.

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ஒரு இணைய தளம்! உங்களுக்காக.....


உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுடைய பிறந்த தேதியை வைத்து உங்களுடைய அதிஷ்ட எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கை சொடுக்கும் நேரத்தில் அதைக் கணித்துத்தர ஒரு இணைய தளம் உள்ளது.

அதை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டி இங்கே உள்ளது

அது உலகப்புகழ் பெற்ற எண்கணித மேதை சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண் சாஸ்திரப்படி உள்ளது. அதுதான் அதன் (அந்த தளத்தின்) சிறப்பு அம்சமாகும்! சீரோ எண் கணிதத்தைக் கற்றுக்கொண்டது இந்தியாவில் என்பது அதைவிடச் சிறப்பான செய்தியாகும்!

பார்த்து மகிழுங்கள்! பயன்படுத்தி மகிழுங்கள்!

அந்த தளத்தை வைத்து நம் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பெயர் எப்படி உள்ளது? அதிர்ஷ்டமானதாக உள்ளதா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அத்தனை பெயர்களுமே சூப்பரான அதிர்ஷ்டத்துடன் உள்ளன.

1. Tata = 10 (Lucky Number)
2. Birla = 9 (Lucky Number)
3. Goenka = 23 (Lucky Number)
4. Tirubhai Ambani = 36 (Lucky Number)
5. Venkateshwara = 46 (Lucky Number)

ஐந்தாவதாக உள்ளவர் யாரென்று கேட்கிறீர்களா? அவர்தான் நம்ம வெங்கி. ஏழுமலை மேலே த்லைமை அலுவலகம் வைத்திருக்கிறாரே - அந்த வெங்கிதான்!:-))))))))

தேடுதலுக்கான சுருக்கு வழிகள்

தேடுதலுக்கான சுருக்கு வழிகள்

நாம் பல இணைய தளங்களில் தகவல்களைத் தேடுகிறோம்.  கூகுள் மட்டுமின்றி, பிங், பேஸ்புக், யு–ட்யூப், இ–பே போன்ற பிற தளங்களிலும் தகவல்களைத் தேடுகிறோம். இந்த தேடுதல்களின் போது, நாம் விருப்பப்படாத அல்லது தவிர்க்க விரும்பும் தகவல்கள் மற்றும் கோப்புகள் குறித்த முடிவுகள் நமக்குக் கிடைக்கும். இதனால் நம் நேரம் மட்டுமின்றி இதற்கான கட்டணமும் வீணாகும். இந்த தேடல்களில் நம் தேடல் முறைகளைச் சற்றுக் கவனத்துடன் கையாண்டால், நேரம் வீணாவதனைத் தடுக்கலாம். தேடல் முறைகளில் சில சுருக்கு வழிகளை இதற்கெனக் கையாளும் வழிகளை இங்கு பார்க்கலாம்.

கூகுள் தேடுதளம்:

1. குறிப்பிட்ட தளத்திற்குள்ளாகத் தேட: உங்களுடைய இணைய தகவல் தேடலை, ஒரு குறிப்பிட்ட தளத்திற்குள் மேற்கொண்டால் போதும் என விரும்புகிறீர்களா?  அவ்வாறென்றால், (தேடுதல் கேள்வி/சொல்) தளம்: (தளப்பிரிவு) என அமைக்கவும். எடுத்துக்காட்டாக,  computer tips  தினமலர் தளத்தில் தேடிப் பெற வேண்டும் எனில்: computer tips site:www.dinamalar.com   என அமைக்கலாம். இதிலும் தினமலர் தளத்தில் கம்ப்யூட்டர் மலர் தளப்பக்கங்களில் மட்டும் எனில் computer tips
site:www.dinamalar.com/computermalar  என அமைக்க வேண்டும்.

2.சில வகைக் கோப்புகளில் மட்டும்: உங்கள் தகவல்கள் ஒரு சில பி.டி.எப். வகைக் கோப்புகளில் மட்டும் உள்ளது என எதிர்பார்க்கிறீர்கள். அல்லது டாகுமெண்ட் வகைக் கோப்புகளை மட்டும் தேடிப் பார்க்க எண்ணுகிறீர்கள். இந்த வகையினும் வரையறை செய்திடலாம். computertips filetype:pdf  எனத் தர வேண்டும். இந்தக் கட்டளைக்கு தேடும் தகவல்கள் உள்ள பி.டி.எப். பைல்கள் மட்டுமே தேடிக் காட்டப்படும். இதே போல்  ps, doc, ppt, xls, rtf  ஆகிய வகை கோப்புகளையும் வரையறை செய்து தேடலாம். இது போல இன்னும் பலவகை கோப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு தேடலாம்.

3.முடிவுகளை விலக்க:  சில வகை முடிவுகள் உங்கள் தேடலுக்கு விடையாக இருக்க நீங்கள் விரும்பவில்லை. அவை குறித்து ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்றால், அவற்றை விலக்கி முடிவுகளைத் தருமாறு கட்டளை வரியினை அமைக்கலாம். எடுத்துக் காட்டாக ஆப்பிள் நிறுவன தளத்தில் தகவல்களைத் தேடுகிறீர்கள். அப்போது ஐ–பேட் குறித்த தகவல்கள் உங்களுக்கு வேண்டாம் எனில், அதனை விலக்கி கட்டளை வரி அமைக்கலாம். Apple -iPad  என அமைக்க வேண்டும். இத்துடன் மேலே குறித்த சில கட்டளைகளையும் இணைத்து அமைக்கலாம். Apple -iPad -site:apple.com  என்றும் Apple -iPad -PDF   எனவும் பயன்படுத்தலாம்.

4.உள்ளூர் தகவல் மட்டும்: சில வேளைகளில் உள்ளூர் தகவல் மட்டும் தேவைப்படலாம். மதுரையில் என்ன நேரம் என அறிய வேண்டுமா? time [madurai]   என டைப் செய்து தேடவும். சீதோஷ்ண நிலை அறிய weather [madurai]  என டைப் செய்திடலாம்.

5. அலகு மாற்றம்: அளவுகளின் அலகுகளை மாற்றி அறிய, ஒரு நாட்டின் கரன்சி மதிப்பினை இன்னொரு நாட்டின் கரன்சி மதிப்பில் அறியவும், தேடல் கட்டளைகளைச் சுருக்கிப் பயன்படுத்தலாம்.  7 inches in cm மற்றும்  30 Euros in USD எனத் தரலாம்.

பிங் தேடுதளம்:

1.குறிப்பிட்ட பைல்வகை பெற: தேடும் பொருள் குறித்த சிலவகை பைல்களை பிங் தேடுதளத்தில் பெற [தேடும் சொல்] contains [ பைல்வகைசி எனத் தரவும். எடுத்துக்காட்டாக rahman contains mp3 என டைப் செய்தால், ரஹ்மான் பாடல்களில் எம்பி3 பார்மட் உள்ளவை மட்டும் கிடைக்கும். இதே போல  WMA, PDF, AAC, DOC, ஆகிய பைல்களையும் தேடிப் பெறலாம்.

2. பின்புல படம் நீக்க: பிங் தேடுதளம் மிகவும் அழகாகத்தான் உள்ளது. ஆனால் அதன் போட்டோக்கள் நம்மை திசை திருப்புகின்றன. http://www.bing.com/?rb=0 என்ற முகவரியில், எதுவும் இல்லாத பிங் தேடுதளம் கிடைக்கும்.

இதே போல அல்லது இது போன்ற வழிகளில் மற்ற தேடுதளங்களிலும், நம் தேடல் முறைகளில் சில வரையறைகளை உருவாக்கி, தேடல் நேரத்தை மிச்சப்படுத்தி, நமக்கான முடிவுகளை நாம் விரும்பும் வகையில் பெறலாம்.

சனி, 23 அக்டோபர், 2010

எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.  எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும்.

படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும்.
இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint  எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View  மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதான் எனப்பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரியவேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா?  Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம். இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா?

Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப்படாதீர்கள்.செய்து பாருங்கள்.படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப் படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.

ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இது போல வேடிக்கையான செயல்களையும் சீரியஸான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open ன்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image  மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம்.

உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா?  சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG,  அல்லது GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

பணம் சம்பாதிக்க வழியா! இல்லை? வாருங்கள் இங்கு!


இன்றைய காலகட்டத்தில் மனிதனின் பல்வேறு தேவைகளின் பொருட்டு ”திரை கடல் ஓடியும் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறான்” . அவனுடைய இளமைப்பருவத்தில் பெற்றோரின் கவனிப்பில் இருந்து மற்றும் குடும்ப நிலைமைகளிலும் பலர் உழைக்க வேண்டும், உழைக்க வேண்டும்.

நான் உழைத்தவற்றை தங்களால் சரியாக அனுபவிக்கவும் தெரியாதவர்களும் இந்த உலகில் தான் இருக்கிறார்கள். பணம், பணம் அது எங்கே இருக்கு என்று ஓடி ஓடி அழுத்தவர்களும் இருக்கிறார்கள், பணத்திற்காக கொள்ளை, கொலை, மோசடி எவ்வாறான பல்வேறு மக்களை கவர்ந்து இழுத்து பணம் இல்லை என்றால் வாழ்க்கையில் வசந்தம் இல்லை என்றும் அலைந்து திரியும் நபர்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே எமது முன்னோர் பாடி வைச்சிருக்கான் நமக்கு பணத்திற்காக அலைந்து திரியும் பெற்றோர். தங்களுடைய பிள்ளைகளை சரியான முறையில் கவனிக்காமல் அது கெட்ட நடத்தைகள் என்று பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் கேள்விப்படும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. 

என்னைப் பொறுத்த மட்டில் அந்தப் பணம் அளவோடு இருப்பது சிறந்ததும் அத்துடன் அதனை தேடிய அந்த நபர் அனுபவிப்பதும் தான் அதனை விட மேலும் சிறந்தது. 

நானும் நீண்ட நாட்களாக இணையத்தில் பணம் சம்பாதிக்க முடியும் முடியும் என்று கூவித்திரிகிறார்கள் எங்கே அது என்று அலையும் போது என்னுடைய கண்களுக்கு பட்ட ஒரு தளத்தினை உங்களுக்குத் தரப் போகிறேன். 

உங்களுக்கும் திறமையிருந்தால் நீங்களும் உங்களுடைய டெலிபோன் பிள், தன்னீர் பிள், பொக்கட் மணி என பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தலாம் மற்றும் நீங்கள் இணையத்தில் இணைந்து ரசிக்கக்கூடிய பல்வேறுபட்ட விடயங்களுக்கு அவர்கள் டொலர் கணக்கில் கேட்பார்கள் நாங்கள் இதனை வழங்கி எங்களுடைய தேவையைப் போக்கலாமே.

ஏன் இன்னும் சிந்திக்கிறீர்கள் இங்கு கீழே  கிளிக் பண்ணி பாருங்கள்
Banner  1

வியாழன், 21 அக்டோபர், 2010

மென்பொருள் ஆங்கிலம், ஹிந்தி படிக்க..........

ஆங்கிலம், ஹிந்தி படிக்க -Rosetta Stone


     

இனையத்தில் ஆங்கிலம் படிக்க நிறைய சிறந்த நூல்கள், தளங்கள், மென்பொருட்கள் இருக்கின்றன. ரொசெட்டா ஸ்டோன் எனப்படும் இந்த மென்பொருளையும் பரீட்சீத்து பாருங்கள்.

212 எம்பி கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும். பின் உங்களுக்குத் தேவையான மொழிப்பொதிகளை தரவிறக்கிப் உட்செலுத்த முடியும். இம்மொன்பொருள் ஆதரிக்கும் மொழிப்பொதிகள்.

Languge pack

English (Amrican) 1,2,3
English (British) 1,2,3
Chinese 1,2
Mandarin 1,2
Japanice 1,2
Arabic 1,2
French 1,2
Hindi 1,2
..etc

இது சிறுவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. ஒரு ஆசிரியர் போல அனைத்தையும் விவரமாக சொல்லித் தருகின்றது.

ஆரம்பத்தில்

Languge Basics கற்றுத்தரப்படும். பின்னர் Greetings and Introductions அதன் பின்னர் Work and School மற்றும் Shopping என்று முதல் சீடியில் நான்கு பாட விடயங்கள் இருக்கின்றன. பாடங்களை ( Core Lesson > Pronuciation > Vocabulary > Grammar > Listening and Reading > Writing > Listening > Speaking > Review என்று படிப்படியாக கற்கலாம். அழகான புகைப்படங்களோடு உதாரணம் காட்டுவதால் கற்பவர்களின் / சிறுவர்களின் மனதில் சீக்கிரமாக பதிகின்றது.

சரியான உச்சரிப்பு முறையை காட்டித்தருகின்றார்கள். நீங்கள் சொல்வது சரியென்றால் பச்சை நிறத்தில் காட்டப்படும். பிழையானால் மஞ்சல் நிறத்தில் காட்டப்படும். முயற்சித்து முடியாமல் போனால் கீழிருக்கும் ஸ்பீகர் பட்டனில் அழுத்தி உங்களின் உச்சரிப்பை சரிபார்த்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறும் முடியாவிட்டால் அக்கேள்வியை (Skip) நிராகரித்துவிட்டு அடுத்த கேள்விக்கு செல்லமுடியும். ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் நீங்கள் கற்றவை சார்பாக ஒரு (Milestone) உரையாடலும் உண்டு. அதனால் மேலும் ஆர்வம் அதிகரிக்கின்றது.

5 வயது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கற்க முடியும். நாம் சிறுவர்களுக்கு சினிமா, கணனி விளையாட்டுக்களுக்கு அனுமதியளிக்காமல் இதுபோன்ற அறிவு வளரக்கூடிய மென்பொருட்களை அளிக்கலாம்.

மென்பொருள் பதிவிறக்க முகவரி : -

www.RosettaStone.com


புதன், 20 அக்டோபர், 2010

இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு


GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech  படிக்க மத்திய அரசால்  நடத்தப்படும் தேர்வாகும்.  இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.  இதில்  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/
 
இந்தியாவில் 8 இடங்களில் உள்ள  IIT, 20 இடங்களில் உள்ள  NIT,  டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில்  M.E/M.Tech, Phd  படிக்க GATE  என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது,  இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview)  மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன.


இந்த தேர்வை எழுதும் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி  சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது. 
  
பெற்றோர்களே!

நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள். மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின் சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில் சேருங்கள்
 
பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான். கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது, பணத்தை வைத்து  கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,  எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு கடவுள் இருகின்றான், கடவுளின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் கடவுள் நமக்கு வெற்றியை தருவான்.

S.சித்தீக்.M.TechTNTJ மாணவரணி GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27, ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட  State Bank of India  கிளைகள்  (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Chairman, GATE Office, Indian Institute of Technology Madras,
Chennai 600 036,

மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)


தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

 1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

 2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்.

 3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்.

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பயனுள்ள அவசியமான தளங்கள்

பயனுள்ள அவசியமான தளங்கள்


















சில தளங்கள் அனைவருக்கும் பயன்படக்
கூடிய தளங்கள். அவற்றில் முக்கிய சில
தளங்களை இங்கு காணலாம்.
 
1. மிகப் பெரிய பைல்களை அனுப்ப இதுவரை
 YouSendIt   என்னும் தளம்தான் அதிகமான
வசதிகளுடன் பயன்படுத்தப்பட்டு வந்த
பயனுள்ள தளம் என்று எண்ணி இருந்தோம்.
 ஆனால் www.mediafire.com  என்னும் தளம்
 அதனையும் தூக்கிச் சாப்பிடும் வகையில்
 மிகப் பெரிய பைல்களைக் கையாள்கிறது.
 அது மட்டுமின்றி இந்த தளத்தில் இயங்குவது
 மிக எளிதாக உள்ளது.

2. இன்ஸ்டண்ட் மெசஞ்சர் மூலம் பிறருடன்
 செய்திகளை உடனுடக்குடன் பேசி, டைப்
செய்து அனுப்ப முடிகிறது. அத்தகைய வசதிகள்
 தரும் தளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து
 ஒரே தளத்தில் கிடைக்கும்படி http://www.meebo.com/ 
 என்ற தளம் இயங்குகிறது. . AIM, Gchat, Yahoo!, MSN 
 என இன்னும் பல இன்ஸ்டண்ட் மெசஞ்சர்
 தளங்கள் நிறைய இந்த தளத்தில் கிடைக்கின்றன.

3. ஆடியோ, வீடியோ, டாகுமெண்ட் வகைகள்
பல்வேறு பார்மட்டுகளில் கிடைக்கின்றன.
அனைவரும் அனைத்து வகைகளையும் கையாள
முடியாது. எனவே தங்களுக்குத் தேவயான
பார்மட்டுகளில் கிடைக்கும் பைலை மாற்ற வசதி
தேடுகின்றனர். இவர்களுக்கு உதவிடும் தளமாக,
எந்த பார்மட்டையும் மாற்றித் தரும் தளமாக 
 http://www.youconvertit.com/  என்ற முகவரியில்
உள்ள தளம் இயங்குகிறது.

4. கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் பழக்கத்திற்கு
 நீங்கள் அடிமையா? அப்படியானால்
http://www.addictinggames.com/  என்ற முகவரியில்
 உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். யு–ட்யூப் தளத்தில்
 கிடைப்பது போன்ற பிளாஷ் அடிப்படையிலான பல
 கேம்ஸ் தொகுப்புகள் இங்கு உள்ளன. நீங்களே
உங்கள் கேம்ஸ் ஒன்றை இங்கு பதிக்கலாம்.
 உங்களுடைய தளத்திற்கு ஒரு கேம்ஸ் எடுத்துச்
 சென்று பதித்துக் கொள்ளலாம்.

5. யாருக்கும் அறிமுகம் தேவைப்படாத ஒரு தளம்
 யு–ட்யூப் தளமாகும். ஆன்லைன் வீடியோ என்றால்
 அது யு–ட்யூப் தான். 2005 ஆம் ஆண்டு பே பால்
தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சிலரின்
 முயற்சியால் அறிமுகமான இந்த தளம் கூகுள்
உடன் இணைந்து இன்று உலக அளவில் எந்த
வீடியோவையும் யாரும் மற்றவருக்குக் காட்ட
 பயன்படுத்தக் கூடிய தளமாகச் சிறப்பாகச்
செயல்பட்டு வருகிறது. இதன் முகவரி
அனைவருக்கும் தெரியும் என்றாலும் இதோ
 இங்கும் தருகிறோம். http://www.youtube.com/

6. அறிவியல் தேடல்களின் உச்சகட்ட தளமாக
 இயங்குகிறது. விண்ணில் என்ன நடக்கிறது
 என மாணவர்களும், ஆசிரியர்களும் கற்று அறிய
 அனைத்து தகவல்களையும் தருகிறது. விண்ணில்
இயங்கும் கோள்கள் குறித்த தகவல்கள், விண்ணில்
 செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்கள் சார்ந்த திட்ட
 தகவல்கள் இங்கு எளிதாக்கப்பட்ட வகையில்
வகைப்படுத்தப்பட்ட வழிகளில் கிடைக்கின்றன.
தளத்தின் ஆரம்பத்தில் முதல் ஐம்பது ஆண்டு களில்
 நாசா மையம் வளர்ந்த வகையைக் காணலாம்.
 அதன்பின் விண்ணில் வலம் வரும் கோள்கள்
 குறித்து அறியலாம். இந்த தளத்தின்
முகவரி:  http://www.nasa.gov/

7. விண்வெளியிலிருந்து இன்றைய நானோ
 தொழில் நுட்பம் வரை உங்களுக்கு எதில்
 சந்தேகம் வந்தாலும் அதனைத் தீர்த்து வைக்கும்
 வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இந்த தளம். அறிவியலின் எந்த முனையையும்
விட்டுவைக்காமல் அனைத்தும்
குறித்த தகவல்கள் இங்குள்ளன.
 நாம் தேடும் எதனையும் பெறலாம்
 என்ற நம்பிக்கையுடன் இந்த தளத்திற்குச்
 செல்லலாம். தள முகவரி:
 http://www.sciencedaily.com/

8. நம் உடல் நலம் குறித்து நாம் தெளிவாக
அறிந்து கொள்ள உள்ள தளங்களில் முதல்
இடத்தை இந்த தளம் கொண்டுள்ளது. WebMD
  மற்றும் Symptom Checker   என்ற பிரிவுகளில்
உடல்நலம் குறித்து சரியாக அறிந்து
கொள்ளலாம். நீங்கள் நோயாளியா? உங்களை
 எது உடலுக்குள் ளாக வருத்திக்
 கொண்டிருக்கிறது என்பதை இந்த தளத்தின்
மூலம் அறியலாம். இதன்
முகவரி:  http://www.webmd.com/

9. உங்களிடம் இன்டர்நெட் கனெக்ஷன்
இருந்தால் ஆங்கில மொழியில் நீங்கள்
 ஏற்படுத்தும் ஸ்பெல்லிங் தவறுகளுக்கு
 சமாளிப்புகளைத் தர முடியாது. ஏனென்றால் 
 www. dictionary.com  என்ற முகவரியில் உள்ள
தளம் பல வசதிகளுடன் கூடிய டிக்ஷனரியைத்
தருகிறது. சொற்களுக்குப் பொருள் கூறும்
டிக்ஷனரி மட்டுமின்றி ஒரே பொருள் கொண்ட
 பிற சொற்கள் தரும் தெசாரஸ், கலைக்
களஞ்சியங்கள், மொழி பெயர்ப்பாளர்களுக்கு
உதவி என இன்னும் பல வசதிகளைக்
கொண்டுள்ளது. ஆங்கிலத்தில்
 டாகுமெண்ட்களைத் தயாரிப்பவர்களுக்கு
 கூடவே இருந்து உதவிடும் அருமையான
தளம் இது. இதன்
முகவரி :  http://www.dictionary.com/

10. தேடுதல் தளங்களில் ஏக போக
 சக்கரவர்த்தியாக மாதந்தோறும் ஏதாவது
 புதிய வசதிகளை இணைத்துக் கொண்டே
 செல்லும் கூகுள் தேடும் தளம் குறித்து
 இங்கு தனியாக எதுவும் சொல்ல
வேண்டியதில்லை. இருப்பினும்
அதன் முகவரி http://www.google.com/

11. எந்த சாதனம் எப்படி இயங்குகிறது?
 இந்த அறிவியல் கோட்பாடு என்ன
சொல்கிறது? என்ற பெரிய அளவிலான
சந்தேகம் மட்டுமின்றி அன்றாட நடைமுறை
 வாழ்க்கையின் சாதாரண செயல்பாடுகளுக்கும்
கூட அறிவியல் விளக்கம் வேண்டுமா? 
 http://www.howstuffworks.com/  என்ற
முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.
 ஜி.பி.எஸ். எப்படி நம் இடத்தைக் கண்டுபிடிக்கிறது
என்பதிலிருந்து வெங்காயம் உரித்தால்
ஏன் கண்ணில் நீர் வருகிறது என்பது வரை
அனைத்து வகையான தேடல்களுக்கும் பதில்
தரும் தளமாக இது இயங்குகிறது. இதன்
முகவரி : http://www.howstuffworks.com/


12. எப்படி ஒன்றை நிறைவேற்றுவது?
மிளகு எப்படி பயிரிடுவது? என்பதிலிருந்து
உங்களுடைய எக்ஸ் பாக்ஸ் சாதனத்தினை
 எப்படி செட் செய்யலாம் என்பது வரை
அனைத்து வினாக்களுக்கும் விடை
 அளிக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ள
 தளம் http://www.instructables.com/ அது
 மட் டுமின்றி உங்களிடமும் ஒரு பொருள்
குறித்த திட் டம் இருந்தால் இந்த தளத்தில்
 ஏற்றி வைக்கலாம். காண வேண்டிய
 முகவரி : http://www.instructables.com/


14. யார் வேண்டுமானலும் இந்த தளம்
அனுமதிக்கும் மொழியில் எந்த பொருள்
 குறித்த அல்லது ஆட்கள் குறித்த தகவல்களை
இங்கு கட்டுரையாக ஏற்றலாம். இதனால்
உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை என்றால்
 இங்கு சென்று பெறலாம். தவறான தகவல்
என்று தெரிந்தால் நீங்களே திருத்தலாம்.
 இதனைப் பயன்படுத்துபவர்களே எடிட்டர்களாக
இருப்பது அதிசயம் அல்லவா! இணையத்தில்
ஒரு கலைக் களஞ்சியமாக உருவாகி இன்று
அனைவரும் அடிக்கடி சென்று வரும் ஓர்
 தளமாக பெயர் பெற்றுள்ளது விக்கிபீடியா.
 இதன்முகவரி:  http://www.wikipedia.org/

எனது வலைபூவிற்கு வருகைதந்ததிக்கு நன்றி