செவ்வாய், 16 நவம்பர், 2010

வலையில் பார்த்த சில புத்தகங்கள்.....


அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்......

வலையில் பார்த்த சில புத்தகங்கள்..... பதிவிறக்கமும் செய்யலாம்

http://www.childrensbooksforever.com/

குழந்தைகளின் வயதுகேர்ப்ப வகைபடுத்தி இருகிறார்கள்.

அனைவ‌ருக்கும் உப‌யோக‌மாக‌ இருக்கும் என‌ நினைக்கிறேன்.

திங்கள், 15 நவம்பர், 2010

ஓவிய கலரிங் இணையம் - குழந்தைகளுக்கு


சிறுவர் சிறுமியர்க்கு ஓவியங்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுதல் என்பது சந்தோஷம் தரும் விஷயம்

வாட்டர் கலர் பென்சில் க்ரேயான் என பல முறையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் வர்ணம் பூசுவது அவர்களுக்கு சந்தோஷம் தருவதுடன்  அவர்களுக்குள் இருக்கும் கலை திறமை வெளிவர உதவும் பக்கம் கூட அது பேப்பரில் அவர்கள் வர்ணம் பூச செலவு ஆவதுடன் மறுமுறை  வேறு நிறம் மாற்ற முடியாது மற்றும் அடிக்கடி கலரிங் புக் வாங்க கூட செலவு செய்ய வேண்டும்

இந்த இணைய உலகில் அதற்க்கு ஏற்ற ஒரு சிறந்த் இணையதளம் இது இதில் பல பிரிவுகளில் பல்வேறு படங்கள் மற்றும் நாம் வர்ணம் பூச எதுவாக வர்ணம் இல்லாமல் நகல் எடுக்கும் வசதி இதில் உள்ளது

நமக்கு தேவையான படங்களை பிரிண்ட் எடுக்கலாம்

இணையம் பயன்படுத்தும் போதே சிறந்த முறையில் வர்ணம்  பூசி நாம் விரும்பும் நண்பர்களுக்கு அனுப்பலாம்

மற்றும் மற்றவர்கள் பயன்படுத்திய கலரிங் ஓவியங்களை பார்க்கலாம்


இதன் மூலம் நம்மை விட மற்றவர்கள் சிறப்பாக கலரிங் பூசி இருந்தால் மீண்டும் நாம் இன்னும் சிறப்பாக பூச மயற்சி செய்யலாம்

நான் வர்ணம் கலரிங் செய்ததது 


இந்த இணையத்தில் பதிவு செய்து பயன்படுத்தலாம் பதிவு செய்யாமல் கூட பயன்படுத்தலாம்

www.coloring.com   சிறப்பான இந்த இணையத்தை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்

இந்த இணையதளம் செல்ல இதை அழுத்தவும்




ஞாயிறு, 14 நவம்பர், 2010

பார்த்ததும் பிடித்துப்போன தளங்கள்........



தொழில்நுட்ப தளங்கள்/வலைப்பூக்கள்

நீங்க:    தொழில்நுட்ப வலைதளங்கள் இவ்வளோவா இருக்கு?!....

நான்:    அட போங்க. நானும் அப்படித்தான் நினைச்சுகிட்டு 
திரிஞ்சேன்.   இன்னும் ஏராளமா இருக்குபா. !!!!!!!!!  :)........



பார்த்ததும் பிடித்துப்போன தளங்கள் 


http://akhenam.blogspot.com

 

 ப்ளாஷ் கற்றுக் கொள்ள வேண்டுமா?
போட்டோஷாப் கற்றுக் கொள்ள 
 (உங்கள் போட்டோக்களை தாருமாறாக அழகேற்றுங்கள்)

http://tamilpctraining.blogspot.com

 

 

சனி, 13 நவம்பர், 2010

TuxPaint & TuxMath க்ரியேடிவ் மென்பொருட்கள் - குழந்தைகளுக்காக.....


அறிந்தோ அறியாமலோ, நம்மில் பலர் தம் குழந்தைகளுக்கு, கணினி விளையாட்டு என்ற பெயரில், கத்தியையும், ஏ.கே  47 ஐயும் கொடுத்து அவர்களின் பிஞ்சு மனதில் வன்முறை எண்ணங்கள்  வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்துவிட்டோம்.

கணினி விளையாட்டுகளில் பெரும்பாலும் ஆயுதங்களோடுதான்  சுற்றுகிறார்கள் நமது சின்னஞ் சிறுசுகள்.

அவர்களுக்கு ஒரு மாற்றாக, Paint Brush + Power Point + Instant Artist ஆகிய மென்பொருட்கள் கலந்த ஒரு கலவையாக, அவர்களுக்கு உற்சாகமும், க்ரியேடிவ் திறனும் வளர்க்கும் வகையில் TUXPAINT என்ற கட்டற்ற இலவச மென்பொருள் உங்கள் குழந்தைகளுக்காக  குழந்தைகள் தினத்தில் வழங்கி மனம் மகிழ செய்யுங்கள். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் உள்ளது)
 
 

இது Tuxpaint மற்றும் Tuxpaint Stamps என இரண்டு பிரிவுகளாக உள்ளது.

முதலில் Tuxpaint ஐ நிறுவுங்கள். இந்த மென்பொருளை நிறுவுவது மிகவும் எளிது.  Installation முடிந்தவுடன் Tux Paint Config திரைக்கு வந்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
 
 
 
இதில் Video/Sound டேபில் சென்று உங்களுக்கு தேவையான திரை  அளவு, ஒலி ஆகியவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
 
 
இதே போன்று ஒவ்வொரு டேபிலும் சென்று தேவையான வசதிகளை செய்து கொள்ளுங்கள். 
இனி Tuxpaint Stamps ஐ நிறுவுங்கள். இதில் உங்களுக்கு தேவையான Components அனைத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.  


இனி உங்கள் குழந்தைகளின் உற்சாகத்தைப் பாருங்கள்.

 
 
சரி குழந்தைகளுக்கு விளையாட்டு மட்டும் போதுமா? படிக்க வேண்டாமா? என கேட்பவர்களுக்கும், எவ்வளவுதான் சொல்லிக் கொடுத்தாலும் கணக்கு பாடம் மட்டும் புரிவதே இல்லை என யோசிக்கும் பெற்றோர்களுக்கும் வரபிராசதமாக அமைகிறது TuxMath எனும் ஒரு இலவச மென்பொருள்.



 இது கணித பாடத்தை விளையாட்டாய் கற்றுக் கொடுக்கும் சுவாரசியமான மென்பொருள்.
 
கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல் என பல வகையான வசதிகள்.


இது ஒரு ஸ்பேஸ் விளையாட்டு போல வடிவமைக்கப்பட்டு ஸ்கோர்களும் வழங்கப்படுவதால், குழந்தைகளை மிகவும் கவரும் என்பதில் ஐயமில்லை.


ஒவ்வொரு வகுப்புகளுக்கு ஏற்றவாறு, கணித ஸ்கில்லை தேர்வு செய்து கொள்ளலாம்.



மேலும் நெகடிவ் மற்றும் பாஸிடிவ் எண்களின் கூட்டல், கழித்தலும் உண்டு.
 
தரவிறக்கி உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து, அவர்களை உற்சாகப் படுத்துங்கள்! 
 


குழந்தைகளுக்கு எனது இனிய 
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

போன்களின் [ மொபைல் ] ரகசிய குறியீட்டு எண்கள்.....


     வணக்கம் நண்பர்களே தங்களை சந்திபதில் ம்கிழ்ச்சி..
தற்போது நாம் காண இருப்பது மொபைல் போன்களில் செயல்படும் ரகசிய குறியீட்டு எண்களை பற்றி தான்....

     ரகசிய குறியீட்டு எண்கள் என்றால்..?
     ரகசிய குறியீட்டு எண்கள் என்பது தங்கள் போன்களில் உள்ள சில தகவல்களையும்,ரகசிய தகவல்களையும் பற்றி தெறிந்து கொள்ள பயன்படும் குறியீட்டு எண்கள்.....

     நாம் பார்க்க இருப்பது NOkia மொபைல் போன்களில் ரகசிய குறியீட்டு எண்கள் தான்..




*#0000#          - தங்கள் மொபைல் போனின் சாப்ட்வேர் தகவல்களை தெறிந்துக்கொள்ள.

*#06#              - போனின் International Mobile Equipment Identity No அதாவது EMI NO தெறிந்துக்கொள்ள.

*#21#           - தங்கள் போனில் Call Divert செய்துயிருந்தால் தாங்கள் Divert செய்த மொபைல் போனில் எண்ணை காண.

*#92702689#  -முக்கிய ஒன்று தங்கள் போனின் 
1.Serial Number, 
2. உருவாக்க பட்ட நாள், 
3.சந்தைக்கு வந்த நாள், 
4.கடைசியாக மொபைல் போனை ரிப்பேர செய்த நாள் (0000 என்றால் no repairs), 
5.மொபைல் போனின் LIfe Timer ஆகியவற்றை காணலாம்..
Refresh Ur Phone means Switch off then Switch On.

*#2820#          -தங்கள் போனின் Bluetooth தகவலை பற்றி தெறிந்துக்கொள்ள.

*#2820#          -Bluetooth Deviceயின் addressயை பற்றி தெறிந்துக்கொள்ள.

*#delset#        -தங்கள் போனின் MMS/GPRS Settings அழிக்க/நீக்க

*#73#              -தங்கள் போனின் கேம்ஸ் மற்றும் நேரத்தை Reset செய்ய

*#147#            -யார் தங்களுக்கு கடைசியாக கால் செய்தது என்பதை காண் (Only In Vodafone)

*#1471#           கடைசியாக தங்கள் மொபைல் கால்(Only In Vodafone)

*#7780#           - Restore Factory Settingsயை மேற்க்கொள்ள...அதாவது தங்கள் போனை பழைய நிலைக்கு கொண்டு வர.

*#7328748263373738#தங்கள் போனின் Security Codeயை Reset செய்ய...
தங்கள் Nokia போனின் Default security Code 12345
     
தங்கள் மொபைல் போனில் தொடரந்து '0' வை அழுத்திக் கொண்டே இருந்தால் தங்கள் மொபைல் போனின் Home Page ஓப்பன் ஆகும்

     அடுத்தது தங்கள் மொபைல் போனில் பதியபட்டுள்ள சாப்ட்வேர் பற்றி தெறிந்துக்கொள்ள வேண்டுமா....இதோ 


Operating system

Symb OS v6.1

    Nokia 7650 Nokia 3650 Nokia 3660 Nokia N-Gage Nokia N-Gage QD Siemens SX-1 Sendo X

Symb OS v7.0

    Nokia 3230 Nokia 6600 Nokia 6620 Nokia 6260 Nokia 6670 Nokia 7610 Panasonic X700 Panasonic X800

Symb OS v8.0

    Nokia 6630 Nokia 6680 Nokia 6681

Symb OS v8.1

    Nokia N70 Nokia N90

Symb OS v9.1

    Nokia N91 Nokia 3250 Nokia E60 Nokia E61 Nokia E70 Nokia N71 Nokia N80 Nokia N92
இந்த பகுதி தங்களுக்கு பிடித்துயிருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துகளை தெறிவிக்கவும்....நன்றி..

ஒரு இணையதளம் - சுற்றுலா செல்லும் முன் உலா வர





வரலாறு உங்களை வரவேற்கிற‌து.

சுற்றுலா பிரியர்களுக்கான புதிய இணையதளமான ஹிஸ்டார்வியஸ் இப்படி தான் சொல்லாமல் சொல்லி இணையவாசிகளை அழைக்கிறது.

வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் மற்றும் விரும்புகிறவர்கள் இந்த தளத்தை தவறாமல் குறித்து வைத்து கொள்ளலாம்.அதே போல வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல இருப்பவர்கள் முதலில் இந்த தளத்தில் ஒரு உலா வரலாம்.

சுற்றுலா விவரங்களை தருவதற்காக தான் ஏற்கனவே பல இணையதள‌ங்கள் இருக்கின்றணவே என்று நீங்கள் கேட்கலாம்.சுற்றுலா விவரங்களை த‌ருவதோடு மட்டும் அல்லாமல் தங்குமிடத்தை புக செய்வதில் துவங்கி பயணத‌தையே முன்கூட்டியே திட்டமிட உதவும் தளங்களும் இருக்கின்றன.

இவற்றை தவிர எந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானித்து விட்டால் அங்கு பார்க்க வேண்டிய இடங்களை இணையத்தில் தேடுவது மிக சுலபம்.குறிப்பிட்ட நகரங்கள் பற்றி தகவல்கலை தரும் பிரத்யேக தளங்களும் இல்லாமல் இல்லை.

ஆனாலும் கூட ஹிஸ்டார்வியஸ் கவனத்தில் கொள்ள வேண்டிய சுற்றுல தளமாக விளங்குகிறது.

அதற்கு காரணம் இந்த தளம் வரலாற்று நோக்கிலான விவரங்களில் கவனம் செலுத்துவது தான்.ஆம் ஒவ்வொரு நாட்டிலும் பார்க்க கூடிய வரலாற்று மையங்கள் பற்றிய விவரங்களை இந்த தளம் இணையவாசிகளுக்கு தருகிறது.

அட சுற்றுலா என்றாலே வரலாற்று மையங்களும் அடக்கம் தானே என்று மீண்டும் கேட்க தோன்றலாம்.இந்திய என்றால் தாஜ்மாகால்,இத்தாலி என்றால் கோலாஸியம்,பாரீஸ் என்றால் ஈபிள் கோபுரம் என எல்லா சுற்றுலாவுமே வரலாற்று நினவு சின்னங்களோடு தானே தொடர்பு படுத்தப்படுகிறது?

வாஸ்தவம் தான்.ஆனால் இங்கே தான் ஹிஸ்டார்வியஸ் தளம் அர்த்தம் பெறுகிற‌து.

இந்த தளம் புகழ் பெற்ற வரலாற்று சின்னங்கள் குறித்த தகவல்களை தருவதோடு மறைந்திருக்கும் வலாற்று பொக்கிஷங்களையும் அடையாளம் காட்டுகிறது என்பதே விஷயம்.அதாவது பல‌ரும் அறியாத அவ்வளவாக பிரபலாலமாகாத ஆனால் வரலாற்றின் சுவடுகளை தன்னுள்ளே கொண்டிருக்கும் இடங்களை இந்த தளம் அறிய உதவுகிற‌து.

உதாரணத்திற்கு இத்தாலியின் ரோம் என்றதுமே எல்லோருக்குமே நினைவுக்கு வருவது வரலாற்று சின்னமான கோலாஸியம் தான்.ஆனால் அதற்கு மிக அருகாமையிலேயே ரெயிலில் போக கூடிய தொலைவில் ஆச்டிய அன்டிகா என்னும் இடம் இருப்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று இந்த தளம் கேட்கிற‌‌து.ரோம் ந‌கரின் ஆதி கால துறைமுகத்தின் மிச்ச சொச்சமாக விளங்கும் வரலாற்று பொக்கிஷம் இது. அதெ போல ரோம் நகருக்கு வெளியே ஹாட்ரியன் வில்லா என்னும் அருமையான வரலாற்று இடம் உள்ளது.

சுற்றுலா வரைபடங்களில் விடுப்பட்டு போகும் இது போன்ற வரலாற்று மாணிக்கங்களை இனையவாசிகளுக்கு சுட்டிக்காட்டுவதையே இந்த தளத்தின் தனிச்சிறப்பு என்று சொல்லலாம்.

திரைப்படங்களில் அற்புதமாக நடிக்கும் துணை நடிகர்களை பலரும் கண்டும் கொள்ளாமல் நட்சத்திரங்கள் மீது மட்டுமே கவன்ம் செலுத்துவது போல வரலாற்ரு இடங்கள் என்று வரும் போதும் எகிப்தின் பிரமிட்டும்,இந்தோனேசியாவின் அங்கோர்வாட்டும் தான் கோலோச்சுகின்ற‌ன.

இவ்வ‌ளவு ஏன் இந்தியா என்றவுடன் தி தாஜ்ஜும் ,ஜெய்புரும் தானே முன்னிலை பெறுகின்றன.அதிக போனால் நம்மூர் மகாபலிரத்தை கவனத்தில் கொள்கின்ற‌னர்.தஞ்சை பெரிய கோயிலோ,மதுரை நாயக்க மகாலும் எத்தனை வெளிநாட்டவருக்கு தெரியும் சொல்லுங்கள்.இதே போல இந்தியா முழுவதும் அறியப்படாத வராலற்று சிறப்பிடங்கள் இருக்கின்றன.

வெளிநாட்டவரை விடுங்கள் .நம்மவரகளுக்கே கூட இவற்றில பெரும்பாலான இடங்களை தெரியும் என்று சொல்ல முடியாது.

உலகம் முழுவதும் உள்ள இத்தகைய பிரபலமில்லாத ஆனால் பார்க்க வேண்டிய‌ இடங்களின் இருப்பிடமாக திகழ வேண்டும் என்பதே இந்த தள‌த்தின் உயர்வான நோக்கம்.

அனால் ஒன்று இணையவாசிகளின் பங்களிப்பு இல்லாமல் இந்த நோக்கம் நிரைவேறுவது சாத்தியமில்லை.எனவே தான் இந்த தளம் வரலாற்று தளங்கள் பற்றீய விவரங்களை சமர்பிக்க அழைப்பு விடுக்கிறது.உங்கல் ஊரில் உள்ள பிரபலமான வரலாற்று சின்னம் முதல் கொண்டு பலரும் அறியாத அரிதான இடங்கள் பற்றிய தகவல்களையும் இங்கு இணையவாசிகள் சமர்பிக்கலாம்.

அந்த வகையில் வராலாற்று இடஙக்ளுக்கான விக்கிபீடியா என்றும் இத‌னை சொல்லலாம்.

இப்போது தான் துவங்கப்பட்டுள்ளதால் இந்த தளத்தில் அதிக இடங்கள் இல்லை.ஆனால் இணையவாசிகள் பங்களிப்பால் இந்த தள‌ம் வளரும் போது உலகம் முழுவதும் உள்ள வரலாற்று பொக்கிஷங்களை இங்கே எதிர்பார்க்கலாம்.அந்த வகையில் நம்மவர்களும் இந்திய பொக்கிஷங்களை இங்கே பதிவு செய்யலாம்.

ஒரு முழுமையான வரலாற்று சுற்றுலா வழிகாட்டி தளத்துக்கான அனைத்து அம்சங்களும் இந்த தளத்தில் உள்ளன.

சுற்றுலா பிரியர்கள் தாங்கள் பார்வையிருவத‌ற்கான இடங்களை தேடும் வசதியும் உள்ளது.வரலாற்று காலத்தை குறிப்பிட்டும் தேடலாம்.

இடங்கள் பற்றீய வரலாற்று தகவல்கள மட்டும் அல்லாமல் அவை தொடர்பான அனைத்து விவரங்களையும் தருவதே பிரதான நோக்கம் என்றும் இந்த தளம் குறிப்பபிடுகிற‌து.அதே போல இதில் உள்ள விவரங்களை கொண்டு நம‌க்கான சுற்றுலா கையேட்டினையும் உருவாக்கி கொள்ள‌லாம்.

இணையதள முகவரி :

http://www.historvius.com/



வெள்ளி, 12 நவம்பர், 2010

இணையத்தளம் படிக்கலாம் வாங்க......இமெயில் மூலம்


சில கம்பெனிகளில் இமெயில் மட்டுமே பயன்படுத்தும் படி கட்டுப்பாடுகளை வைத்து இருப்பார்கள். இதனால் நாம் நமக்கு பிடித்தமான அல்லது நாமக்கு அவசரமாக இணையத்தளங்களை பார்க்க வேண்டும் , படிக்க வேண்டும் என்றால் முடியாமல் தவிப்போம். இந்த பிரச்சினைகளை போக்கி இணையத்தளங்களை இமெயில் மூலம் படிக்கும் வசதியை செய்து தருவதற்கு என்று ஒரு இணையத்தளம் உள்ளது. www.webtomail.co.cc  இந்த இணையத்தளத்திற்கு சென்று நாம் படிக்க வேண்டிய இணைத்தளத்தின் முகவரியை சப்ஜெக்டாக டைப் செய்து , நமது இமெயில் முகவரியில் இருந்து www.webtomail.co.cc என்ற முகவரிக்கு  மெயில் அனுப்பி வைக்க வேண்டும். உதாரணமாக www.google.com என்ற முகவரியை நாம் பார்க்க வேண்டும் என்றால் www.google.com என்று இந்த முகவரியை இமெயிலின் சப்ஜெக்டாக டைப் செய்து அனுப்ப வேண்டும்.நாம் அனுப்பிய சிறிது நேரத்தில் நாம் அனுப்பிய இணையத்தளத்தின் பக்கங்களை HTML  வடிவில் நமது இமெயிலுக்கு அனுப்பி வைப்பார்கள். நாம் அதனை படித்தோ பார்த்தோ தெரிந்து கொள்ளாலாம். என்ன
நண்பர்களே உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமல்லவா...

ஹலோ ...ஹலோ....என்னங்க ....... வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு  போங்களேன்

வியாழன், 11 நவம்பர், 2010

தமிழ் அகராதி ( PALS Tamil e-DICTIONARY )

தமிழ் அகராதி (கூடுதல் தகவல்களுக்கு) இங்கே கிளிக் செய்யவும்
 
PALS Tamil e-DICTIONARY
PALS e-DICTIONARY
ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ்

Pals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ் அகராதி.

இந்த அகராதி சுமார் 22,000 முக்கிய சொற்களையும் மற்றும் 35,000 வழி சொற்களையும் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு சொற்களின் பொருளும் முதலில் ஆங்கிலத்திலும் பின் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பொதுவாக பயன்படுத்தப்படும் சொற்களும் அதன் ஆங்கிலம் மற்றும் தமிழ் பொருளுடன் அதற்கான சொற்களின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகராதியில் சில பயனுள்ள தகவல்களான சுருக்கங்கள், இயல்பில்லா வினைச்சொற்கள், கோணங்களின் ஒப்பீடு மற்றும் கிரேக்க எழுத்துக்கள் போன்றவை உள்ளன.

e-Dictionary ஒரு உலாவும் நிரலையும் தேடும் நிரலையும் கொண்டுள்ளது.

உலாவும் நிரல் ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அகராதியை உலாவும் போது ஒருவர் புல்லாங்குழல் வித்வான் ஷாஷன்க்கின் இசையைக் கேட்டுக் கேட்டே உலாவலாம்.

தேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம். 

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.


PALS Tamil e-DICTIONARY
- தமிழ் - ஆங்கிலம்

Pals e-Dictionary என்பது ஒரு குறுவட்டிலுள்ள தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி.
இந்த அகராதில் 49000க்கும் அதிகமான சொற்கள் உள்ளது, இதிலும் ஒரு உலாவும் முறைமை மற்றும் ஒரு தேடும் முறைமையைக் கொண்டுள்ளது

உலாவும் முறைமை ஒருவரை அகராதியின் பக்கங்களை புத்தக வடிவினை போல உலாவ அனுமதிக்கிறது. பக்கங்கள் முதல் இரண்டு எழுத்தில் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

தேடும் நிரல் ஒரு பயனருக்கு ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருளை விரைவாக தேடிப் பெற அனுமதிக்கிறது. தேடும் சொல் ஆங்கிலம் அல்லது தமிழாக இருக்கிறது. மேலும் விரிவாக தேடும் முறையில் ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கான அனைத்து பொருளையும் கொடுக்கிறது. அனைத்து சொற்களும் ஹைபர்லிங்க் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு சொல்லை கிளிக் செய்தே அதன் பொருளை பெறலாம். 

தேடும் முறைமையில் இன்னொரு வசதி என்னவென்றால் வேர் சொற்களின் பொருளை ஒருவர் பெறலாம்.

ஒருவர் ஒரு முறையிலிருந்து மற்றொரு முறைமைக்கு தேவையான பொத்தானை கிளிக் செய்வது மூலம் மாற்றலாம்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தமிழ்99 விசைப்பலகை மற்றும் TAM எழுத்துரு குறிமுறை தரப்படுத்தல் தமிழுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பழனியப்பா பிரதர்ஸ் 
நியூ 25, பீட்டர்ஸ் ரோடு 
சென்னை - 600 014.
தொலைபேசி: 91-44-28132863. 
மின்னஞ்சல்: sales@palbrothers.com
இணையதளம் :www.palbrothers.com


விண்டோஸுக்கு
  • நிறுவல் தகவல்கள் 
    • இந்த தகவல்களை பின்பற்றி மென்பொருளை நிறுவவும் :
    • Pals-Tamil-e-Dictionary.zipஐ கீழேயுள்ள இணைப்பிலிருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் ஒரு அடைவில் சேமிக்கவும்.
    • zip கோப்பு சேமிக்கப்பட்ட அடைவுக்குச் செல்லவும்.
    • zip கோப்பினை பிரித்தெடுக்கவும்
    • பால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்
    • பால்ஸ் தமிழ் e-அகராதி கோப்புறையை திறக்கவும்
    • Setup.exe நிரலை அதன் சின்னத்தை இரட்டை சொடுக்குவது மூலம் இயக்கவும்.
    • நிறுவலுக்கு பின் கணினியை மீண்டும் துவக்கவும்.
    • பணிப்பட்டையில் Start பொத்தானை கிளிக் செய்யவும்.
    • Programs -> Pals Tamil e-Dictionary -> Tamil e-Dictionary என தேர்ந்தெடுக்கவும்
    • அகராதியைப் பயன்படுத்த தேவையான அனைத்து தகவல்களும் மென்பொருளிலேயே உள்ளது
  • (73 எம்பி)
  • பகுதிகளாக பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும். அனைத்து பகுதிகளையும் பதிவிறக்கி ஒரு அடைவில் சேமிக்கவும். பதிவிறக்கிய பின் இங்கிருந்து பதிவிறக்கவும்: 1 2 3 4 5 6 7 8 (ஒவ்வொன்றும் 10 எம்பி)

புதன், 10 நவம்பர், 2010

பல அலகுகளில்(unit) மாற்றி கண்டறிய.........

மாற்றங்களை தரும் இணையதளங்கள்!

நாம் இந்த கணிணி உலகில் பல விதமான கோப்புகளை பயன்படுத்துகிறோம். சில சமயம் ஒரு வகை கோப்பை மற்றொரு வகை கோப்பாக மாற்ற வேண்டியிருக்கும். இந்த வசதியை சில இணையதளங்கள் ஆன்லைனில் இலவசமாக அளிக்கின்றன.

அவற்றில் ஒன்று. http://www.youconvertit.com/

இந்த இணைய தளத்தில் நாம் இலவசமாக பதிவுசெய்து கொண்ட பிறகு நமக்கு 1GB இடம் அளிப்பார்கள், அந்த இடத்திற்குள் நாம் கோப்புகளை மாற்ற அப்லோட் செய்யலாம். மாற்றப்பட்ட கோப்புகளுக்கான லிங்க் நம் மின்னஞ்சலுக்கு வரும். மேலும் இந்த லிங்க் மேற்கண்ட இணையதளத்தில் நம் கணக்கிலும் இருக்கும்.

1GB இடம் வரை நாம் கோப்புகளை மாற்றிக் கொள்ளலாம் இடம் நிரம்பி விட்டால். ஏற்கனவே உள்ளவைகளை அழித்து விடலாம். எனவே அந்த 1GB ஸ்பேஸ் அப்படியே இருக்கும்.

இந்த இணையதளத்தின் மற்றொரு சிறப்பு pdf to wordக்கு ஒரு இணையதளம் விடியோ பைல்களுக்கு ஒரு இணையதளம், இமேஜ் பைல்களுக்கு ஒரு இணையதளம் என்றில்லாமல் எல்லாவித ஃபைல்களையும் ஒரே இடத்தில் கன்வர்ட் செய்ய முடிகிறது.

இங்கே கன்வர்ட் செய்யக்கூடிய பைல் பார்மட்டுகள்:

Document file formats: Csv, Doc, html, ods, odt, pdf, rtf, sdc, sdw, stc, stw, sxc, sxw, vor, xhtml, xls, xlt
Audio file formats: Aac, aif, aiff, mp3, ra, wav, wma
Video file formats: asf, flv, mov, mp4, mpeg, mpg, rm, swf, wmv
Image file formats: Bmp, dpx, gif, jpeg, pam, pbm, pcx, pgm, png, ppm, ras, sgi, tga, tif, tiff, yuv
Archive file formats: 7z, bz2, bzip2, gz, gzip, tar, tbz, tbz2, tgz, zip


நாம் சில சமயங்கள் வேலை செய்யும் போது இன்ச் அளவுகளை செண்டிமீட்டர்களில் எவ்வளவு என தெரிந்துகொள்ள விரும்பலாம். அதற்கு எப்படி அதை செய்வது என குழம்பி கொண்டிருக்கலாம். இவ்வளவு ஏன் நாம் சமையல் செய்யும்போது ஒரு கப் சர்க்கரை, இரண்டு மேஜைகரண்டி எண்ணெய் என அளவுகளை பார்த்திருப்போம். இவற்றிற்க்கான லிட்டர் மில்லிலிட்டர் அளவுகள் நமக்கு தெரியுமா! இது போன்று அளவுகளை மாற்ற நாம் விரும்பினால் அனைத்தையும் ஒரே இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

http://www.convert-me.com

  • நிறை மற்றும் எடை(Mass and Weight), 
  • தூரம் மற்றும் நீளம்(Distance and Length), 
  • கொள்ளளவு மற்றும் கனஅளவு(Capacity and Volume), 
  • பரப்பு(Area), 
  • வேகம்(Speed), 
  • முடுக்கம்(Acceleration), 
  • வெப்பநிலை(Temperature), 
  • நேரம்(Time), 
  • அழுத்தம்(Stress and Pressure), 
  • ஆற்றல்(Energy and Work), 
  • திறன்(Power), 
  • விசை(Torque), 
  • பாய்ம வீதம்(Flow rate by volume, Flow rate by mass), 
  • வட்ட அளவு(Circular measure),
  • கணிப்பொறி(Computer storage), 
  • தகவல் பரிமாற்றம்(Data transfer rate), 
  • எரிபொருள் சிக்கனம்(Fuel Economy), 
  • சமையல்(Cooking), 
  • பின்னம் மற்றும் சதவீதம்(Fractions and Percent)
  • பண மாற்று வீதம்(Currency Rates)
இவைகளை பல அலகுகளில்(unit) மாற்றி கண்டறியலாம்.

செவ்வாய், 9 நவம்பர், 2010

தேசிய வடிவமைப்பு ஆடைகழகம்......என்ஐஎப்டி-ல் நேர்காணல்

 

இலவசத் திறன் மேம்பாட்டு பயற்சிக் கல்விக்கு என்ஐஎப்டி-ல் நேர்காணல்

சென்னையில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு கழகத்தில் (என்ஐஎப்டி) வரும் 10ஆம் தேதி இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி கல்விக்கு முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகின்றது.

தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகமானது 2010-11ஆம் ஆண்டுக்கு பின்வரும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக் கல்வியை முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னையில் உள்ள என்ஐஎப்டி-இல் வழங்குகிறது.

அதன்படி +2 முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் உடைகள் தொழில்நுட்பத்தில் ஒரு பயிற்சி கல்வியும், ஏதாவது ஒரு பாடப் பிரிவில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு ஓராண்டுக்கு ஆடைகள் ஏற்றுமதி வர்த்தக நிர்வாகத்தில் ஒரு பயிற்சி கல்வியும் வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சிக் கல்விகளில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சிறுபான்மை சமூகத்தினராக இருக்க வேண்டும். அவருடைய ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதில் சேர விரும்பும் மாணவர்களின் வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சிக் கல்விகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 10ஆம் தேதி சென்னை என்ஐஎப்டி-இல் முற்பகல் 10 மணியிலிருந்து பகல் ஒரு மணிவரை நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியான மாணவர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் ராஜீவ் காந்தி சாலை, தரமணி,  சென்னை-600 113 என்ற முகவரியில் உள்ள தேசிய வடிவமைப்பு ஆடை கழகத்தை தொடர்பு கொள்ளலாம். அல்லது 044-2254 2755 தொலைபேசி எண்ணிலும்
academics.niftchennai@gmail.com எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்   மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.



குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இணையத்திலிருந்து தமிழ் கற்க...

தாயகத்திலிருந்து  அயலகம் பெயர்ந்தோர் தங்கள் மழலைகளுக்கு தமிழினை எவ்வாறு சொல்லிக்கொடுப்பது என்கின்ற சிக்கலை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தளம் எளிதாக தீர்க்கின்றது. இப்படியொரு இணையக்கல்வி இருப்பதினை ஏன் இன்னமும் நம் தமிழக அரசோ அல்லது மக்கள் தொடர்புச் சாதனங்களோ பெரிய அளவினில் பிரபல படுத்தவில்லை என்பது இன்னமும் வியப்பளிக்கின்றது!?  இதனுடன் தமிழகத்திலிருந்து விடுதலைப்போராட்டவீரர்களின் பங்கு, சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், விடுதலைக்கு முன்பும் & பின்பும் ஆண்டவர்கள் மற்றும் ஆண்டுக்கொண்டிருப்பவர்கள், அவர்களின் ஆட்சி முறை, இயற்கை வளங்கள், தொழில் துறை என அனைத்து வித தகவல்களையும் அறியத் தருவார்களேயானால் வளரும் தலைமுறையினர் பெரிதும் பயன் பெறுவர். 

இத்தளத்திற்குச் செல்ல  சொடுக்கவும்...



தமிழ் இணைய வழிக்கல்வியின் மழலை பாடவிவரங்களுக்கு...
http://www.tamilvu.org/tvutab/courses/primer/bp70/html/bp70home.htm

தமிழ் இணைய வழிக்கல்வியின் முழு பாடவிவரங்களுக்கு...

இது போன்ற பயனுள்ள தளங்கள் ஏதேனுமிருப்பினும் தாங்களும் பகிர்ந்துக் கொள்ளலாம். அனைத்துவிதமான தகவலுடன் விரைவில் தொடர்புக்கொள்வோம். ஆக்கப்பூர்வமான நேர் / எதிர்மறை கருத்துக்கள் ஏதுமிருப்பின் அவசியம் பின்னூட்டமிடவும்.

திங்கள், 8 நவம்பர், 2010

உலகெங்குக்குமான அவசர உதவி எண்


 
Join Only-for-tamil

ஒவ்வொரு நாட்டிலும் அதில் உள்ள மாநிலங்களிலும் மக்களின் சேவைக்காக அவசர உதவி எண் வழங்கப் பட்டிருக்கும் இதில் மருத்துவ வசதி, தீயணைப்பு படை, அவரச போலீஸ், ஆம்புலன்ஸ் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள் நாம் ஒவ்வொருவரும் இதுபோல அவசர உதவி எண்களை ஞாபகம் வைத்திருக்கிறோமா என்றால் நிச்சயம் இல்லையென்கிற பதிலாகத்தான் இருக்கும். 

நாம் நமது தமிழ்நாட்டில் உள்ள அவசர உதவி எண்களை நாம் எப்படியாவது தெரிந்து வைத்துகொள்ளலாம். ஒருவேளை நீங்கள் வேறு ஒரு மாநிலம் அல்லது வேறு நாட்டிற்கு சென்றிருக்கிறீர்கள் அங்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது அப்போது உங்களுக்கு அவசர உதவி எண் இருந்தால் எளிதாக தொடர்பு கொள்ளலாமே அதை தெரியப்படுத்த தான் இந்த பதிவு. 

உங்கள் அலைபேசியில் 911 என்கிற இந்த மூன்று இலக்க அவசர அழைப்பு எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த எண் எப்படி எல்லா நாட்டிற்கும் பொருந்தும் என நினைக்கிறீர்களா? ஒவ்வொரு நாட்டிற்குமான தொலைத் தொடர்பு சேவையில் இந்த 911 என்கிற அவசர அழைப்பு எண் இருக்கும். நீங்கள் அலைபேசி சேவையை உபயோகிப்பவர்களாக இருந்தாலும் இந்த எண் அழைப்பதற்கு தடையில்லை. நீங்கள் 911 அழைக்கும் போது அதுவாகவே உங்களுக்கு அருகில் உள்ள உதவிக்கான மையத்தை சென்றடையும். பின்னர் அதன் மூலம் உங்களுக்கு உதவிகள் கிடைக்கக்கூடும். 

மேலும் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்களால் அழைப்பு ஏற்படுத்தி பேசி உதவி கேட்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் 911 என்கிற எண்ணிற்கு அழைப்பு ஏற்படுத்தி விட்டீர்கள் என்றால் அவர்களாகவே உங்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும் ஒரு சின்ன தகவல்.  உங்கள் அலைபேசி நம்பர்பேட் (Keypad) பூட்டு (Lock) இடப்பட்டிருந்தாலும் இந்த 911 என்கிற எண் மட்டும் டயல் செய்ய இயலும். வேறு எந்தவொரு எண்ணும் இது போல டயல் செய்ய முடியாது. 

இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் இந்த எண்ணின் அவசியம். நண்பர்களே குறித்து வைத்துக்கொள்ளுங்கள் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு இது பயன்படக்கூடும், இது உங்களுக்கு புதியதாக அல்லது உபயோகமானதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

ஞாயிறு, 7 நவம்பர், 2010

செஸ் விளையாடி உங்கள் திறமையை வளர்க்கலாம். (ஆன்லைன் -ல்)

புத்திக்கூர்மையான விளையாட்டு என்று சொல்லக்கூடிய செஸ் விளையாட்டை ஆன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடலம். செஸ் விளையாட்டைப்பற்றி மேலும் பல அறிய தகவல்கள் தெரிந்து கொள்ளலாம்..... என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

விளையாட்டுக்கு மொழி முக்கியமல்ல, உடல் தகுதியும் முக்கிமல்ல அறிவு அதுவும் துல்லியமான அறிவு இது மட்டும் போதும் என்று சொல்லும் செஸ் விளையாட்டில் தினமும் புதிது புதிதாக ஏதாவது ஒன்றை விளையாடி கற்றுக்கொண்டிருப்போம். ஆனால் கணினியுடன் செஸ் விளையாட்டை விளையாடும் போது பல நேரங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் ஆனால் ஆன்லைன் மூலம் செஸ்விளையாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் விளையாடலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.chess.com 

இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கை உருவாக்கிக்கொண்டு நாம் விளையாட தொடங்கலாம். இந்ததளத்தில் 6,00,000 மேற்பட்ட பயனளார்கள் உள்ளனர். இதில் சராசரியாக 2000 பேர் எப்போதும் ஆன்லைன் -ல் செஸ் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் நாம் சேர்ந்து செஸ் விளையாடலம்.  Learn chess  என்பதை சொடுக்கி செஸ் விளையாட்டைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம். மொபைல் மற்றும் ஐபோன் மூலமும் நாம் இந்தத்தளத்தின் மூலம் செஸ் விளையாடலாம். செஸ் விளையாடும் நண்பர்களுக்கு கண்டிப்பாக இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

சனி, 6 நவம்பர், 2010

இலவச சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator)


பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்களை வரை கணக்கு என்று எதாவது ஒன்று வந்தால் உடனடியாக நாடுவது கால்குலேட்டரைதான் ஆனால் சில சமன்பாடு கணக்கு என்றால் கால்குலேட்டரில் எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வசதிகளையும் தாங்கி ஒரு இலவச Scientific Calculator  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Equation வைத்து வரும் கணக்கை செய்து முடிக்க நம்மிடம் சையின்டிபிக் கால்குலேட்டர் இல்லை என்றாலும் எளிதாக இந்த மென்பொருள் துணையுடன் முடிக்கலாம். எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் சில நிமிடங்களிலே செய்து முடிக்கலாம். ஸ்பீட் கிரன்ஞ் என்ற இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த முகவரியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.


2.5 MB அளவுள்ள இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவி இதை இயக்கலாம். எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சந்தேகம் Help -க்கு சென்று உடனடியாக சரி பார்க்கலாம். மற்றபடி சையின்டிபிக் கால்குலேட்டரில் நாம் பயன்படுத்தும் அத்தனையையும் இதில் பயன்படுத்தலாம் இன்னும் சொல்லப்போனால் அதை விட கூடுதலாகவே இதன் பயன்பாடு இருக்கிறது. லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ், மேக் ஓஎஸ், Fedora Core, OpenSUSE, போன்ற பல ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு துணை செய்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு கணிதத்துறையில் உள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வெள்ளி, 5 நவம்பர், 2010

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள்........

எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு
acronymfinder என்ற இணையம் உதவுகிறது


உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும்


தள முகவரி : http://www.acronymfinder.com/


விண்டோஸ் நுட்பங்கள் அறிய...


பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே  பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு. 

தள முகவரி : http://windowssecrets.com/
 
பீட்டா பதிப்புகளை அறிய…

எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/

இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...

HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்  
தள முகவரி :http://www.w3schools.com/
 
தமிழ் – ஆங்கிலம், தமிழ் – ஜேர்மன், ஜேர்மன் – தமிழ் அகராதி
ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/

தொழில்நுட்ப உதவிகளுக்கு…

கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
தள முகவரி :http://techguy.org/

வியாழன், 4 நவம்பர், 2010

MS Excel ல் உங்கள் வயதைக் கண்டறிய...........

 எம்.எஸ்.எக்ஸலில் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் நாட்களின் வித்தியாசத்தை ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழிப்பதன் மூலம் இலகுவாகக் கணித்து விடலாம். எனினும் இரண்டு தேதிகளுக்கிடையே உளள் வித்தியாசத்தை வருடங்களில் மாதங்களில் நாட்களில் எப்படி கண்டறிவது? அதற்கும் ஒரு இலகுவான வழி முறை எக்ஸ்லில் உள்ளது..

இதற்கு எக்ஸலில் உள்ள Datedif எனும் பங்க்ஸ்ன் (function) பயன் படுத்தப்படுகிறது. இந்த Datedif எனும் பங்ஸனை = Datedif (திகதி1, திகதி2, விடை காண வேண்டிய வடிவம்) {=DATEDIF(Date1, Date2, OutputRequirement)} எனும் ஒழுங்கிலேயே வழங்க வேண்டும். OutputRequirement எனுமிடத்தில் மேற்கோள் குறிகளுக்கிடையே "Y” என வழங்கும் போது வருட வித்தியாசத்தையும் "M” என வழங்கும்போது மாதங்களின் வித்திய்சாத்தையும் "D” என்பது நாட்களின் வித்தியாசத்தையும் தரும். இங்கு திகதி1 ஐ விட திகதி2 பெரிதாக இருக்க வெண்டும் என்பதையும் கவனத்திற் கொள்ளுங்கள்..

உதாரணமாக 8/8/1990 எனும் திகதிக்கும் 13/05/2008 எனும் திகதிக்கும் இடையில் எத்தனை வருடங்கள் உள்ளன? எத்தனை நாட்கள் உள்ளன? எத்தனை மாதங்கள் உள்ளன எனக் கணக்கிட முதலில் எக்ஸல வர்க் சீட்டில் B3 எனும் செல்லில் 08/08/1990 எனும் திகதியையும் B4 எனும் செல்லில் 13/05/2008 எனும் திகதியையும் உள்ளீடு செய்யுங்கள்.. திகதியை உள்ளீடு செய்யும்போது உங்கள் கணினியில் திகதி உள்ளீடு செய்யும் வடிவத்தையும் (Date format) கவனத்திற் கொள்ள மறந்து விடாதீர்கள் அனேகமாக் விண்டோஸில் MM/DD/YYYY (மாதம் /திகதி/வருடம்) எனும் திகதி வடிவமே இயல்பு நிலையில் இருக்கும்

அடுத்து இரண்டு திகதிகளுக்கிடையிலுள்ள வருட வித்தியாசத்தைக் கண்டறிய B6 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”Y”) எனும் சமன்பாட்டை டைப் செய்யுங்கள். விடையாக 17 (வருடங்கள்) வரக் காணலாம். அதேபோல் இரண்டு திகதிகளுக்கிடையேயுள்ள மாதங்களின் எண்ணிக்கையைக் காண B7 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”M”) எனவும் நாட்களின் வித்தியாசத்தைக் காண B8 எனும் செல்லில் =DATEDIF(B3,B4,”D”) எனவும் வழங்குங்கள்.

இன்னும் சற்று மாறுதலாக இன்றைய திகதிக்கு உங்கள் வயது என்ன என்பதைக் கண்டறிய வேண்டுமானால் மேற் சொன்ன சமன்பாட்டில் சிறிய மாற்றத்தைச் செய்ய வெண்டும். .
உதாரணமாக B2 எனும் செல்லில் உங்கள் பிறந்த திகதியையும் B3 எனும் செல்லில் இன்றைய திகதியையும் டைப் செய்யுங்கள். B5 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”Y”) எனும் சமன் பாட்டை வழங்கும் போது வருட வித்தியாசம் கிடைக்கும். அவ்வாறே B6 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”YM”) என வழங்குங்கள். வருடங்கள் நீங்களாக மாத வித்தியாசம் கிடைக்கும். B7 எனும் செல்லில் =DATEDIF(B2,B3,”MD”) எனும் சமன்பாட்டை வழங்க வருடங்களையும் மாதங்களையும் தவிர்த்து நாட்களின் வித்தியாச்ம் மாத்திரம் கிடைக்கும்.

இதே சமன்பாட்டை இன்னும் சற்று மாற்றி இன்று உன் வயது …வருடங்கள் … , மாதங்கள் …., நாட்கள் எனவும் காட்டலாம். அதற்கு எக்ஸ்லில் உள்ள TEXT எனும் பங்ஸனையும் பிரயோகிக்க் வேண்டும். இந்த பங்ஸன் என் பெறுமாணத்தை டெக்ஸ்டாக மாற்றி விடுகிறது.

அதற்கு வேறொரு செல்லில் =”இன்று உன் வயது ” & TEXT(B5, "0″) & ” வருடங்கள் ,” & TEXT(B6, "0″) & ” மாதம் ,” & TEXT(B7, "0″) & ” நாட்கள்.” என வழங்குங்கள். இன்று உன் வய்து 19 வருடங்கள் ,1 மாதம் ,19 நாட்கள். எனும் விடையை எக்ஸல் காண்பிக்கும். .

புதன், 3 நவம்பர், 2010

3 டி தேட‌ல் : வித்தியாசமான தேடியந்திரம் (ச‌ர்ச் கீயுப்பு)



ச‌ர்ச் கியூப் தேடிய‌ந்திர‌த்தை உண்மையிலேயே வித்தியாச‌மான‌ தேடிய்ந்திர‌ம் என்று தான் சொல்ல‌ வேண்டும்.அதிலும் எத்த‌னை நாள் தான் ஒரே மாதிரியான‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து கொன்டிருப்ப‌து என‌ நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ தேடிய‌ந்திர‌ம் கொஞ்ச‌ம் புத்துண‌ர்ச்சியை அளிக்க‌ கூடும்.

அந்த‌ அள‌வுக்கு தேட‌ல் முடிவுக‌ளை முற்றிலும் புதிய‌ முறையில் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் காட்டுகிற‌து.

உட‌னே கூகுலுக்கு போட்டியாக‌ ஒரு தேடிய‌ந்திர‌ம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வ‌ந்துவிட்ட‌து என‌ நினைக்க‌ வேண்டாம்.கார‌ண‌ம் கூகுலை வைத்து பிழைப்பு ந‌ட‌த்தும் தேடிய‌ந்திர‌ வ‌கையை சேர்ந்த‌து தான் ச‌ர்ச் கீயுப்பும்.

அது மட்டுமல்ல இணையதளங்களை இணையதுண்டுகளாக (த‌ம்ப்ஷாட்) காட்ட தம்ப்ஷாட்ஸ் இணையசேவையை பயன்படுத்துகிறது.

அதாவ‌து ச‌ர்ச் கியூப்பும் கூகுல் தேடிய‌ந்திர‌த்தையே ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌து.ஆனால் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் தான் வித்தியாச‌ம் காட்டுகிற‌து.உணமையில் இது தேட‌ல் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிட்டு தரவில்லை.அத‌ற்கு மாறாக‌ முப்ப‌ரிமான‌ ச‌துர‌மாக‌ தேட‌ல் ப‌ட்டிய‌லில் உள்ள‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை இட‌ம்பெற‌ வைக்கிற‌து.

இணைய‌த‌ள‌ங்க‌ளின் துண்டு தோற்ற‌ம் (த‌ம்ப்ஷாட்)இந்த‌ ச‌துர‌ம் சுழன்று கொண்டே இருக்கும்.ச‌துர‌த்தில் ஏதாவ‌து ஒரு இட‌த்தில் ம‌வுசை கொண்டு சென்றால் அருகே அந்த‌ இணைய‌த‌ள‌த்தின் அறிமுக‌ம் வ‌ந்து நிற்கிற‌து.அதில் கிளிக் செய்தால் த‌ள‌த்திற்கு விஜ‌ய‌ம் செய்ய‌லாம்.

இணைய‌த‌ள‌ங்க‌ள், இணைய‌ ப‌க்க‌ங்க‌ள்,செய்திக‌ள்,வீடியோ,புகைப்ப‌ட‌ங்க‌ள்,என‌ எல்லாமே இந்த‌ சதுர‌த்தில் இருக்கின்ற‌ன‌.மொத்த‌ம் 96 இணைய‌ துண்டுக‌ள் இவ்வாறு இட‌ம்பெற்றுள்ள‌ன‌. வ‌ரிசையாக‌ தேட‌ல் முடிவுக‌ளை பார்த்து பார்த்து ஏற்ப‌ட்ட‌ க‌ளைப்பு இந்த‌ ச‌துர‌த்தை பார்த்த‌ மாத்திர‌த்தில் வில‌கிவிடும்.

ச‌துர‌த்தை மேலும் கீழாக‌வோ ப‌க்க‌வாட்டிலோ புர‌ட்ட‌லாம்.இந்த‌ தேடிய‌ந்திர‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்ப‌டி என்று த‌னியே குறிப்பும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.அநேக‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து எப்படி? என‌ விள‌க்க‌ம் அளிக்கும் அபூர்வ‌ தேடியந்திர‌ம் இதுவாக‌ தான் இருக்கும்.

ச‌ர்ச் கியூப்பை சூப்ப‌ர் தேடிய்ந்திர‌ம் என்று சொல்ல‌ முடியாவிட்டாலும் முடிவுக‌ளை காண்பிக்கும் வித‌த்தில் சின்ன வித்தியாச‌த்தை செய்து க‌வ‌ர்ந்திழுக்கிற‌து.

காட்சிரீதியாக‌ முடிவுக‌ளை காண்பிப்ப‌து என இத‌னை ச‌ர்ச் கியூப் குறிப்பிடுகிற‌து.வெகு கால‌ம் முன் விவிஸ்மோ தேடிய‌ந்திர‌ம் முடிவுக‌ளை ப‌ட்டிய‌லிடுவ‌தில் புதுமையை புகுத்த‌ முய‌ன்றது நினைவிருக்க‌லாம்.விவிஸ்மோ முடிவுக‌ளை பட்டியலிடும் முறையில் இருந்து வில‌கி அவ‌ற்றை வ‌ரைப‌ட‌ம் போல‌ காட்ட‌ முய‌ன்ற‌து.ஆனால் விவிஸ்மோ இப்போது பயன்பாட்டில் இல்லை.

அந்த‌ வ‌ரிசையில் இப்போது ச‌ர் கியுப் அறிமுக‌மாகியுள்ள‌து.எத‌யும் காட்சி ரீதியாக‌ அணுக‌ விரும்புகிர‌வ‌ர்க‌ளுக்கு நிச்ச‌ய‌ம் இந்த‌ தேடிய‌ந்திர‌ம் பிடித்திருக்கும்.


ஆனால் இத‌னை முழுமையாக ப‌ய‌ன்ப‌டுத்த‌ பிளேஷ் வ‌ச‌தி தேவை. சர்ச் கியூப் உங்களுக்கு பிடித்திருந்தால் அதே பாணியில் வேறு சில தேடிய்ந்திரங்களும் இருக்கின்றன.அவற்றில் ரெட்ஜீயை மிகவும் சிரப்பானது என்று குறிப்பிடலாம்.

அழகிய வரிக்குதிரையின் லோகோ வரவேற்கும் இந்த தேடியந்திரம் வண்ணமயமான பின்னணியில் மாமுலான தேடியந்திரம் போலவே இருக்கிறது.ஆனால் தேடு என கட்டளையிட்ட பின் இதன் தனித்துவம் தெரிகிறது.

தேடல் முடிவுகள் இணையதளங்களின் துண்டு தோற்றங்களாக அரை வட்டமாக தோன்றுகின்றன.வட்டத்தை பக்கவாட்டில் நகர்த்தினால் புதிய இணையதளங்களின் தோற்ற‌த்தை பார்க்க முடியும்.அவை பற்றிய‌ குறிப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.


இதே போல ஆஸ்கோப் தேடியந்திரமும் முடிவுகளை காட்சி ரீதியாக தருகிறது.

செவ்வாய், 2 நவம்பர், 2010

பார்க்க வேண்டிய தளங்கள்

 
இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத அனால் அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம். 
 

http://www.printwhatyoulike.com

 

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன் களில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும். 
 

http://www.alertful.com

 

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா? உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும் 

http://www.pdfunlock.com

 

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
 

http://www.daileez.com

 

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை  காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள  முடியும்

 

http://www.isitraining.in

 

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம்  உலக வானிலை அறிக்கையே உங்கள்  காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

 

http://www.typingweb.com

 

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

 

http://www.gedoo.com

 

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

 

http://www.cvmaker.in

 

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

 

http://www.zoom.it

 

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search   படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.