வியாழன், 23 டிசம்பர், 2010

அதிசய இணையதளம் வேலை தேடுபவர்களுக்கு

வேலை கோரி விண்ணப்பிப்போரையும், வேலை தரக் காத்திருப்போரையும் 30 விநாடிகளில் இணைத்து இருதரப்புக்கும் திருப்திகரமான 'ரிசல்ட்' கிடைக்க வழிவகுக்கிறது கார்ப்-கார்ப்.காம் இணையதளம்.விர்ஜீனியாவைத் தலைமையிடமாகக் கொண்டு 2007ல் நிறுவப்பட்ட நிறுவனம் கார்ப்-கார்ப்.காம். அன்று முதல் இதுவரை பல ஆயிரம் பேருக்கு உரிய வேலைகளை இந்தத் தளம் வாங்கித் தந்துள்ளது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலகட்டத்திலும் கூட தொய்வில்லாமல் பல ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலை கிடைத்துள்ளது வியப்புக்குரிய ஒன்றாகும்.கார்ப்-கார்ப் பயன்படுத்தும் FETCH தொழில்நுட்பம் மூலம் வேலைக்கு ஊழியரைத் தேடுவோர் தங்களுக்குரிய விண்ணப்பதாரர்களை 30 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியும் என்பது தான் இதன் சிறப்பம்சம். 

வேலை கோருவோர், தனக்குப் பிடித்த, பொருத்தமான வேலை எது என்று இங்கே தேடிக் கொண்டிருக்கத் தேவையில்லை. அதேபோல வேலை தருவோரும், தங்களுக்குப் பொருத்தமான நபர் யார் என்பதை தேடிப் பார்க்க வேண்டியதில்லை. அதை கார்ப்-கார்ப் நிறுவன இணையதள சாப்ட்வேரே அழகாக செய்து முடித்து விடுகிறது. கிட்டத்தட்ட ஒரு 'விர்ச்சூவல் அசிஸ்டென்ட்' ஆக மாறி வேலை தேடுவோர் மற்றும் நிறுவனங்களின் வேலையை சுலபமாக்கி விடுகிறது.வேலாக்கு பணியாளரைத் தேடும் நிறுவனம் தனது தேவையை இந்த இணையதளத்தில் பதிவு செய்து விட்டால் போதும். உடனடியாக அதற்குரிய விண்ணப்பதாரர்களை அலசி ஆராய்ந்து, 30 விநாடிகளில் பத்து பேர் கொண்ட பட்டியலை அது கொடுத்து விடும். அந்த பத்து பேரும் டாப் 10 விண்ணப்பதாரர்களாக இருப்பார்கள். இதன் மூலம் உரியவர்களைத் தேடும் வேலையும் குறைகிறது, நல்ல பணியாளர் கிடைக்கவும் வழி ஏற்படுகிறது.இதுகுறித்து கார்ப்-கார்ப் நிறுவனத்தின் சிஇஓ பிரபாகரன் முருகையா கூறுகையில், ஒவ்வொரு நாளும் வேலைக்கு ஆள் தேட செலவிடும் நேரத்தில் 30 சதவீதத்தை எங்களது FETCH முறை மிச்சப்படுத்தித் தருகிறது. இப்போதைய அதிவேகமான காலகட்டத்தில் இது மிகவும் அவசியமான, அத்தியாவசியமான ஒன்றாகும்.

சரியான பணியாளரை தேர்வு செய்து அவர்களை பணியில் அமர்த்தும்போது, தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களின் வேலைத் திறன் 20 சதவீத அளவுக்கு உயரும். தேவையில்லாத நேரச் செலவு குறையும், திறமையான ஊழியர் கிடைக்கும்போது வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமான தயாரிப்புகளை அளிக்க முடியும். நிறுவன வளர்ச்சிக்கும் அது பெரிதும் உதவும்.குறிப்பாக சொல்ல வேண்டுமானால், முற்றிலும் திறமையான 50 பணியாளர்களைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன் 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் டாலர் வரை வருவாய் உயரும்.

இதுதவிர கார்ப்-கார்ப்.காம் இணையதளம், அமெரிக்கா முழுவதும் ஐடி கன்சல்டிங் நிறுவனங்களுக்காக 20க்கும் மேற்பட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது. இதன் மூலம் சிறிய நிறுவனங்களும் பலனடைந்துள்ளன.தற்போது கார்ப்-கார்ப்.காம் இணையதளத்தின் வாடிக்கையாளர் பட்டியல் மிக நீண்டது. 6000க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் வேலைத் தேவையை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். மாதந்தோறும் 30,000க்கும் மேற்பட்ட புதிய வேலை ஒப்பந்தங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவிய காலகட்டத்திலும் கூட நாங்கள் கணிசமான வளர்ச்சியைக் காண முடிந்தது. இதற்கு எங்களது இணையதளத்தில் நாங்கள் பயன்படுத்தி வரும் நவீன தொழில்நுட்பமே காரணம். இதன் மூலம் துல்லியமான முடிவுகள், வாடிக்கையாளர்கள் திருப்தி, அனுபவம் வாய்ந்த, திறமையான ஊழியர்கள் கிடைப்பது என பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.வரும் ஆண்டுகளில் கார்ப்-கார்ப்.காம் இணையதளத்தின் சேவையை உலகம் தழுவிய அளவில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் முருகையா.

http://www.corp-corp.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக