வெள்ளி, 29 ஏப்ரல், 2011

முத்தான மூன்று தளங்கள் புகைப்பட வடிவமைப்புக்கு

எல்லோருக்கும் தங்கள் புகைப்படங்கள் அழகாக தோன்ற வேண்டும் என்றும் மற்றவர்களை அது கவர கூடியதாய் அமைய வேண்டும் என்று எண்ணம் உள்ளது.

புகைப்படங்களை மற்றவர்களை கவரும் வகையில்  வடிவமைப்பிற்கு ஏராளமான தளங்கள் உள்ளன அவற்றில் இருந்து சிறந்த 3 இணைய தளங்கள் இங்கே பதிவு செய்துள்ளேன். 

1. LOONA PIX.COM

http://www.loonapix.com/

இதில் புகைப்படங்களை பல வழிகளில் வடிவமைக்கலாம். போட்டோ பிரேம் , அனிமேஷன் ,காலன்டர் பின்னணியிலும் வடிவமைக்கலாம். 

இத்தளத்தில் வடிவமைக்க்கப்படும் புகைப்படங்களை உங்கள்
நண்பர்களுக்கு இமெயில் மூலம் இததலத்தில் இருந்தே செய்யலாம். 


2.LUNA PIC 
http://www.lunapic.com/

 இந்த தளமானது ஒரு ஆன்லைன் போட்டோ எடிடர் ஆக காணப்படுகிறது. இத்தளத்தில் பின்வரும் வசதிகள் காணப்படுகின்றன.
edit your profile picture for face book
animation
rotating cube
add text , இவற்றுடன் பெய்ண்டிங் வசதியும் உண்டு.


3. FLAUNT  R 
http://www.flauntr.com/

 இந்த தளத்தில் 1000 க்கு மேற்ப்பட்ட போட்டோ எவேக்ட்ஸ்
 பின்வரும் தலைப்புக்களில் தரப்பட்டுள்ளன ;
 styl R , edit R , picas R , text R , profile R இந்த தளத்தில் இருந்து 30 க்கு   மேற்ப்பட்ட சமூக வலைத்தளங்களுக்கான profile போட்டோ வடிவமைக்க முடியும்.
   



https://imo.im/ கடலை போட இங்கே கிளிக் செய்யவும்.

ப்ரியா கடலை போட ?

இணையத்தில் அடி எடுத்து வைத்தவுடனே முதலில் இணைய பயனாளர்கள் கற்றுக் கொள்வது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதே.
பெரும்பாலான இணைய பயனாளர்கள் நண்பர்களிடம் அரட்டை அடிக்கவே இணையத்தை பெரிதும் நாடிச் செல்கிறனர். முக்கியமான தருணங்களில் அரட்டைகளில் ஈடுபடுவது சாதாரண செயல் ஆகும்.

ஆனால் எந்த நேரமும் ஒரு சில இணைய பயனாளர்கள் அரட்டையில் ஈடுபடுவார்கள். அவர்கள் சாப்பிடாமல் வேண்டுமானாலும் இருப்பார்கள். ஆனால் அரட்டையில் ஈடுபடாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். அவர்கள் இணையத்திற்கு தினமும் செல்வார்கள். ஆனால் அவர்கள் செய்யக்கூடிய ஒரே செயல் அரட்டை அடிக்கும் செயல் மட்டுமே ஆகும். இதனால் பணம் மட்டுமே செலவாகும்.
இதுபோன்ற பயனாளர்கள் பல்வேறு இணைய அரட்டைகளில் ஈடுபடுவார்கள். உதாரணாமாக யாகூ, ஸ்கைப், எம்.எஸ்.என், ஜிடால்க் மற்றும் பல இணைய அரட்டைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவார்கள். இதுபோன்ற பயனார்கள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி மென்பொருளை நாடிச்செல்ல வேண்டும்.
நண்பர்களின் கணணியிலேயோ இல்லை ப்ரெளசிங் சென்டரிலேயோ இணைய அரட்டையில் ஈடுபட வேண்டுமெனில் அதற்கு நாம் தேடும் இணைய அரட்டை மென்பொருள் வேண்டும். ஒரு சில கணணியில் Limit பயனர் கணக்கில் பணியாற்றுவோம். அந்த சூழ்நிலையில் நம்மால் மென்பொருளை நிறுவிக்கொள்ள முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க ஒருதளம் உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று வேண்டிய இணைய அரட்டை நிறுவனத்தை தேர்வு செய்து கொண்டு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்ளவும். பின் நீங்கள் விரும்பிய நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட முடியும்.
வீடியோ மற்றும் ஓடியோ அரட்டையிலும் ஈடுபட முடியும். மொத்தத்தில் அரட்டை அடிக்க சிறப்பானதொரு தளம் இதுவாகும். நாம் இனி தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

கவனிக்க வேண்டியவை - ஸ்கைப் உபயோகிக்கும் போது


இணையத்தில் அரட்டையில் தெளிவான வாய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும்.

அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை.

என்றாலும் நிறுவப்படும்போது டிவோல்ட்டாக இருக்கும் ஆப்ஸன்கள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் ஸ்கைப் மென்பொருளை பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் தேவையல்லாத ஆப்ஸன்கள் அற்றதாகவும் மாற்றமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.



அவற்றில் சில இங்கே

1. View வில் எப்போதும் Contatcts என்பதை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

2. Tools - options  சென்று general settings இல் Start Skype when I start Windows  என்பதை Unchek  செய்யுங்கள்

3. Tools - options  சென்று general settings இல் visual style of the window  இல் Classic  Windows என்பதை தேர்வு செய்யுங்கள்

4. Tools - options  சென்று Sounds  இல் Mute all Sounds என்பதை கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் ஸ்கைப்பினால் எழுப்பப்படும் சத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.

5. Tools - options  சென்று Alerts & messages இல் இருக்கும் இரண்டையும் தேர்வில் இருந்து நீக்கிவிடுங்கள் (unchek)

6. Tools - options  சென்று Advanced settings இல் keep skype in the taskbar while I m signed in என்பதை unchek செய்து விடலாம்.

இந்த 6 ஆப்ஸன்களில் மாற்றம் செய்வதன் மூலம் இடையூறில்லாத ஸ்கைப் அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.

இதைவிடவும் வேறு வழிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்.


Folder களை கணினியில் மறைத்து வைப்பதற்கான டூல் (Tool)







பலர் பயன்படுத்தும் கணினிகளில் முக்கியமான ஆவணங்கள் அடங்கிய பால்டரை பிறர் தவறுதலாக அழித்துவிடாமலும் அல்லது அவற்றில் மாற்றங்கள் செய்வதை தவிர்ப்பதற்கும்

குறிப்பிட்ட பால்டரை அக்கணினியில் மறைத்து வைக்க பயன்படும் பார்ட்டபிள் டூல் தான் Hidden DIR  ஆகும்.

இந்த மென்பொருளை தரவிறக்கி பாஸ்வேட் தந்து மறைக்க வேண்டிய பால்டர்களை தேர்வு செய்வதன் மூலம் மறைத்து விடலாம்.

குறிப்பு - கொடுக்கும் பாஸ்வேர்ட்டை மறந்து விட்டால் பால்டர்களை மீளவும் தெரியும்படி செய்ய முடியாது.

டவுண்லோட் http://www.rcpsoft.net/hdir.html



புதன், 27 ஏப்ரல், 2011

சர்ச் இஞ்சினில் கூகுள் கால்குலேட்டர்

சர்ச் இஞ்சினில் கூகுள் கால்குலேட்டர்


பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும். ஆனால் கூகுள் சர்ச் இஞ்சினில் அதன் சர்ச் பாக்ஸினை கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் தீர்வு காணலாம். அரித் மேடிக் பங்சன், டிரிக்னோமெட்ரிக், ஹைபர்போலிக் மற்றும் லாக்ரிதம் செயல்பாடுகளை இதில் மேற்கொள்ளலாம். அளவுகளை மாற்றிக் காணும் வசதியும் இதில் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் எடுத்துக் காட்டு பார்க்கலாம். சர்ச் பாக்ஸில் 100+500-10 என்று கொடுத்து சர்ச் பட்டனை அழுத்தினால் அதற்கான விடை கிடைக்கும். 100ன் லாகிர்தம் வேல்யூ கண்டுபிடிக்க log (100) என டைப் செய்திடலாம். அதே போல cos வேல்யு கண்டுபிடிக்க cos (90) என டைப் செய்து மதிப்பினைப் பெறலாம். கரன்சி மாற்றங்கள், அளவு மாற்றங்கள் ஆகியவை யும் கணக்கிட்டு காட்டப்படுகின்றன. 100 USD in Indian Rupee எனக் கொடுத்தால் அன்றைய கணக்கின்படி இந்திய ரூபாய் மதிப்பு தரப்படும்.

திங்கள், 25 ஏப்ரல், 2011

அனைத்து மல்டிமீடியா பணிகளை செய்ய ஒரே மென்பொருள்

 மல்டிமீடியா பணிகளை செய்ய நாம் வேலைக்கும் தனித்தனி மென்பொருளின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். உதாரணமாக வீடியோ, ஆடியோவை கன்வெர்ட் செய்ய, ரைட் செய்ய மற்றும் மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவை கன்வெர்ட் செய்யவும். ஐபோன், ஐபேட் போன்ற சாதனங்களுக்கான வீடியோ கன்வெர்ட் செய்யவும். 3D போட்டோ மற்றும் வீடியோ உருவாக்கத்திற்கு என ஒவ்வொரு செயலையும் செய்ய நாம் தனித்தனி மென்பொருள்களின் உதவியை நாடிச்செல்ல வேண்டும். இவ்வாறு இல்லாமல் மேலே குறிப்பிட்ட அனைத்து செயல்களையும் ஒரே மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும். இதற்கு இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.

மென்பொருளை தரவிறக்க சுட்டி 



இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளானது 62 எம்.பி அளவுடையதாகும். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் ஆகும். இந்த மென்பொருளின் சிறப்பம்சம் என்னவெனில் ஆடியோ மற்றும் வீடியோ சீடிக்களை இந்த மென்பொருளின் உதவியுடனே ரைட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் ஆப்பிள் சாதனங்களான ஐபேட் மற்றும் ஐபோன்களுக்கு வீடியோவையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். ஆடியோ சீடியிலிருந்து தனியே பாடலை மட்டும் பிரித்தெடுக்கவும் முடியும்.


மொபைல் போன்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ளவும். இந்த மென்பொருள் உதவி செய்கிறது. மேலும் யூடியூப் தளத்தில் உள்ள வீடியோவினை பதிவிறக்கம் செய்யவும். பதிவேற்றம் செய்யவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. மேலும் போட்டோக்களை அழகுபடுத்தவும் கன்வெர்ட் செய்யவும். வீடியோவில் இருந்து போட்டோவினை பிரித்தெடுக்கவும் இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது. மொத்தத்தில் பல்வேறு மல்டிமீடியா பணிகளை செய்ய சிறந்ததொரு மென்பொருள் இதுவாகும். இந்த மென்பொருளின் மூலமாக கன்வெர்ட் செய்யக்கூடிய செயல்கள்.
  • Free YouTube Download
  • Free YouTube to MP3 Converter
  • Free YouTube to iPod and PSP Converter
  • Free YouTube to iPhone Converter
  • Free YouTube to DVD Converter
  • Free YouTube Uploader
  • Free Facebook Uploader
  • Free Video to Android Converter
  • Free Video to Apple TV Converter
  • Free Video to BlackBerry Converter
  • Free Video to HTC Phones Converter
  • Free Video to iPad Converter
  • Free Video to iPod Converter
  • Free Video to iPhone Converter
  • Free Video to LG Phones Converter
  • Free Video to Motorola Phones Converter
  • Free Video to Nintendo Converter
  • Free Video to Nokia Phones Converter
  • Free Video to Samsung Phones Converter
  • Free Video to Sony Phones Converter
  • Free Video to Sony Playstation Converter
  • Free Video to Sony PSP Converter
  • Free Video to Xbox Converter
  • Free DVD Video Converter
  • Free Video to DVD Converter
  • Free Video to Flash Converter
  • Free 3GP Video converter
  • Free Video to MP3 Converter
  • Free Video to JPG Converter
  • Free Audio Converter
  • Free Audio to Flash Converter
  • Free DVD Video Burner
  • Free Disc Burner
  • Free Audio CD Burner
  • Free Audio CD to MP3 Converter
  • Free Screen Video Recorder
  • Free Image Convert and Resize
  • Free Video Dub
  • Free Audio Dub
  • Free Video Flip and Rotate
  • Free 3D Photo Maker
  • Free 3D Video Maker
இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த மென்பொருளின் உதவியுடன் செய்ய முடியும். 
 
 

சனி, 16 ஏப்ரல், 2011

Wi-fi மூலமாக எந்த இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்

கணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத்த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.


Connectify என்ற இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நீங்கள் பயன்படுத்தும் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் வயர்கள் அல்லது கேபிள்கள் இல்லாமல் பல கணிணிகளில் பகிர்ந்து கொண்டு பயன்படுத்தலாம். இதற்கு உங்கள் கணிணியில் விண்டோஸ் 7 நிறுவப்பட்டிருக்க வேண்டும். மேலும் கணிணியில் வயர்லெஸ் சேவையைத் தரும் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்பட்டிருக்க வேண்டும். லேப்டாப்பில் வயர்லெஸ் சேவை இணைந்தே தான் வருகிறது. டெஸ்க்டாப் என்றால் வயர்லெஸ் ரூட்டர் தனியாக போட்டிருக்க வேண்டும்.


இந்த மென்பொருள் என்ன செய்கிறது ?

இந்த மென்பொருள் உங்களிடமுள்ள இணைய இணைப்பை வயர்லெஸ் சேவை மூலம் அதனை ஒரு வயர்லெஸ் ரூட்டராக மாற்றுகிறது. இதன் மூலம் மொபைல், பிராண்ட்பேண்ட், 3G, Wi-fi போன்ற எந்த இணைய இணைப்பையும் பகிருமாறு செய்ய முடியும். உங்கள் கணிணியை மற்ற கணிணிகள் அணுகுமாறு Wi-fi Hotspot ஐப் போல மாற்றுகிறது.



இதனால் வயர்லெஸ் சேவை உள்ள எந்தவொரு கருவிகளும் ( Mobile, PC, Laptop, Tablet pcs, Android devices ) உங்களின் இணைய இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு WPA-PSK முறையிலான கடவுச்சொல் வைத்துக் கொள்ள முடியும். பாதுகாப்பான கடவுச்சொல்லை கொடுத்தால் மட்டுமே இணைப்பைப் பெற முடியும்.

எப்படிப் பயன்படுத்துவது?

1.கீழுள்ள இணைப்பைக் கிளிக் செய்து தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.
http://download.cnet.com/Connectify/3000-18508_4-75024171.html?part=dl-10061477&subj=dl&tag=button

2. நிறுவியதும் உங்கள் கணிணியின் டாஸ்க் பாரில் வலதுபுறத்தில் மென்பொருள் ஐகானாக தோன்றும். அதை கிளிக் செய்தால் அதன் மெயின் விண்டோ திறக்கப்படும்.

3. Wi-fi Name – உங்கள் வயர்லெஸ் இணைப்பிற்கான பெயரைக் கொடுக்கவும். மற்ற கணிணிகளில் அல்லது கருவிகளில் இந்த பெயர் தான் தெரியும்.

4. Password – மற்ற கணிணிகள் உங்கள் இணையத்தை அணுக பாதுகாப்பான கடவுச்சொல்லைக் கொடுக்கவும். குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும்.

5. Internet – இதில் எந்த இணைய இணைப்பைப் பகிரப் போகிறிர்களோ அதைத் தேர்வு செய்யவும். (எ.கா) Local Area Connection, Airtel

6. Wi-Fi – இதில் உங்கள் கணிணியின் வயர்லெஸ் அடாப்டரைத் தேர்வு செய்யவும். (எ.கா) Wireless Area Connection 1


7. பின்னர் Start Hotspot என்பதைக் கிளிக் செய்தால் போதும். இந்த மென்பொருளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்ளும்.

இதில் எத்தனை பேர் நமது இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை
Connected Clients இல் பார்க்க முடியும்.

இதில் ஏற்கனவே நீங்கள் எங்கிருந்தாவது பயன்படுத்தும் வயர்லெஸ் இணைப்பையும் கூட பகிரமுடியும். இந்த மென்பொருளை வீட்டில் , கல்லூரிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வயர்லெஸ் கிடைக்கும் சுற்றளவுக்குள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். மேலும் இதைக் கொண்டு வணிகரீதியாக ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு பணம் என்று தீர்மானித்து பயனர்களுக்கு இணையத்தை அனுபவிக்க வழிசெய்யலாம்.

இறுதியாக இந்த மென்பொருள் இலவசமானது. அற்புதமானது.

தரவிறக்கச்சுட்டி : Download Connectify




வெள்ளி, 15 ஏப்ரல், 2011

சில பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு




இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி இயங்கலாம்.

1. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட் பைல்கள் கம்ப்யூட்டரில் தாமாக அமைந்திட அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அவ்வப்போது கண்டறிந்து, மைக்ரோசாப்ட் இவற்றின் மூலம் அடைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க் கிழமை இந்த பைல்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றை, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், தாமாகவே கம்ப்யூட்டரில் டவுண்லோட் செய்யப்பட்டு, பதியும் படி அமைக்க வேண்டும்.

2. ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டிருக்க வேண்டும்.

3. ஒன்று அல்லது இரண்டு ஆண்ட்டி ஸ்பைவேர் புரோகிராம்களைப் பதிந்து வைத்து, தேவைப்படும்போது இயக்க வேண்டும். பொதுவாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களுடன் இணைந்து இவை கிடைக்கும். மைக்ரோசாப்ட் தன் சிஸ்டத்துடன் பாதுகாப்பு தரும் இத்தகைய புரோகிராம்களைத் தருகிறது.

4. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். மைக்ரோசாப்ட் தரும் புரோகிராமினைக் காட்டிலும் ஸோன் அலார்ம் போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

5. பயர்வால் ஒன்று போதும். இரண்டு இன்ஸ்டால் செய்தால் தலைவலிதான். அதே போல்தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும்.

6. ஒரு பைல் உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை www.virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் ஆக scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

7. சிடியைப் போட்டால் ஆட்டோ ரன் மற்றும் ஆட்டோ பிளே செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறதா? அவற்றை நிரந்தரமாக நிறுத்தும் வழிகளை மேற்கொள்ளவும்.

8. விண்டோஸ் தன் இயக்கத்தின் போது, பல புரோகிராம்களை பின்புலத்தில் இயக்கிக் கொண்டு இருக்கும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைப் பயன்படுத்தி என்ன என்ன புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருக் கின்றன என்று பார்த்து அவற்றின் மேல் ஒரு கண் இருக்க வேண்டும். சந்தேகப்படும் படியான புரோகிராம்கள் இருப்பின், உடனே அவற்றை நிறுத்தினால், சிஸ்டம் இயங்குவதற்கு அது தேவையா எனத் தெரிந்துவிடும்.

9. வைரஸ் குறித்த எந்த கேள்விக்கும் சந்தேகத்திற்கும் மைக்ரோசாப்ட் பதில் அளிக்கத் தயாராய் இருக்கிறது. எனவே வைரஸ் பிரச்னை இருந்தால் உடனே மைக்ரோசாப்ட் தளம் சென்று, அங்கு கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

10. எண்களும் எழுத்துக்களும் கலந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். நீளமாக இருந்தால் நல்லதுதான். உங்களால் அத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்க இயல வில்லை என்றால் www.passpub.com என்ற தளத்தை அணுகவும்.

11. பாஸ்வேர்ட்களை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

12. ஒரே பாஸ்வேர்டினையே அனைத்து கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்த வேண்டாம். ஒவ்வொன்றுக்கும் மாறான பாஸ்வேர்ட் பயன்படுத்தவும்.

13. சிக்கலான மாஸ்டர் பாஸ்வேர்ட் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தளத்திற்கும் சிறிய அளவில் அதனை மாற்றிக் கொள்ளலாம்.

14. 200 சதவிகிதம் சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் லிங்க்குகளை கிளிக் செய்திடவும். இல்லை என்றால் வேண்டவே வேண்டாம்.

15. பொதுவான வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

16. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகிய இரண்டுமே பிஷ்ஷிங் பில்டர்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றை இயக்க நிலையில் வைக்கவும்.

17. உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

18. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பிரபலமான பிரவுசர் தான். அதனால்தான் ஹேக்கர்களும் அந்த வழியிலேயே உள்ளே புக எண்ணுகின்றனர். எனவே மாறுதலுக்காக ஆப்பரா அல்லது பயர்பாக்ஸ் பயன்படுத்துங்கள்.

19.ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்களை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். பிரவுசர்கள் உங்களைக் கேட்காமல் சாப்ட்வேர் அப்ளிகேஷன் களை இயக்க இது உதவுகிறது. எனவே இது இயங்கக் கூடாது.

20. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை வெப்சைட்டில் தரப்போகி றீர்களா? அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என எஸ் சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

21. செக் பாயிண்ட்டின் புதிய ஸோன் அலார்ம் போர்ஸ் பீல்ட் முற்றிலும் பாதுகாப்பான இன்டர்நெட் பிரவுசிங்கை அளிக்கிறது. பிரவுசருக்கும் உங்கள் கம்ப்யூட்டரில் அது ஏற்படுத்தும் மாற்றங்களுக்கும் இடையே ஒரு படிமத்தை உருவாக்குகிறது.

22.முன்பெல்லாம் குக்கிகள் வழியாகத்தான் வைரஸ்கள் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிகள் நம் வேலையை இன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களை யும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் ஆண்ட்டி ஸ்பைவேர் தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்து விடுவதால் அத் தொகுப்பு களை அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

23. உருவாக்கும் ஒவ்வொரு பைலுக்கும் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவும். இதற்கான வழிகள் இப்போது ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளன.

24. உங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களையோ போட்டோக்களையோ இணையத்தில் இட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

25. பொதுவான கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளி யேறுங்கள். அதே போல அத்தகைய கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்டுகளை சேவ் செய்து வைக்காதீர்கள்.

26. உங்களுக்கு ஒரு சேவையை வழங்குகையில் இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் இமெயில் முகவரிகளைக் கேட்கும். 10 நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்று செய்தி வரும். அப்போது தற்காலிக இமெயில் முகவரி தரும் 10minutemail. com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் முகவரிகளை உங்களுக்கு வழங்கும்.

27. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்கள் உற்றவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தரவும். இலவச இமெயில் முகவரிகளைத் தருவதற்கு கூகுள், மைக்ரோசாப்ட் லைவ் மெயில், யாஹூ இருக்கும்போது ஸ்டெப்னி இமெயில் முகவரிகளை நிறைய வைத்துக் கொள்ளலாம்.

28. மொத்தமாக வரும் ஸ்பேம் மெயில்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

29. இமெயில்களை ஸ்பேம் பில்டர் கொண்டு பயன்படுத்தவும். தண்டர் பேர்ட் தன்னிடத்தே ஒரு நல்ல ஸ்பேம் பில்டரைக் கொண்டுள்ளது. அவுட்லுக் 2003 மற்றும் அவுட்லுக் 2007 மைக்ரோசாப்டின் ஸ்மார்ட் ஸ்கிரீன் என்னும் பில்டரைப் பயன்படுத்துகின்றன. இது உங்கள் மெயிலைப் படித்து அதன் தகவல்களிலிருந்து அது ஸ்பேம் மெயிலா என அறிந்து அழிக்கிறது. இவ்வகையில் ஜிமெயில் கிட்டத்தட்ட எந்த குறைபாடும் இன்றி உள்ளது.

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?


உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உங்களுடைய பிறந்த தேதியை வைத்து உங்களுடைய அதிஷ்ட எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கை சொடுக்கும் நேரத்தில் அதைக் கணித்துத்தர ஒரு இணைய தளம் உள்ளது.

அதை உங்களுக்காகக் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டி இங்கே உள்ளது

அது உலகப்புகழ் பெற்ற எண்கணித மேதை சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண் சாஸ்திரப்படி உள்ளது. அதுதான் அதன் (அந்த தளத்தின்) சிறப்பு அம்சமாகும்! சீரோ எண் கணிதத்தைக் கற்றுக்கொண்டது இந்தியாவில் என்பது அதைவிடச் சிறப்பான செய்தியாகும்!

பார்த்து மகிழுங்கள்! பயன்படுத்தி மகிழுங்கள்!

அந்த தளத்தை வைத்து நம் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பெயர் எப்படி உள்ளது? அதிர்ஷ்டமானதாக உள்ளதா என்று பரிசோதித்துப் பார்த்தேன். அத்தனை பெயர்களுமே சூப்பரான அதிர்ஷ்டத்துடன் உள்ளன.

1. Tata = 10 (Lucky Number)
2. Birla = 9 (Lucky Number)
3. Goenka = 23 (Lucky Number)
4. Tirubhai Ambani = 36 (Lucky Number)
5. Venkateshwara = 46 (Lucky Number)

ஐந்தாவதாக உள்ளவர் யாரென்று கேட்கிறீர்களா? அவர்தான் நம்ம வெங்கி. ஏழுமலை மேலே த்லைமை அலுவலகம் வைத்திருக்கிறாரே - அந்த வெங்கிதான்!:-))))))))

வியாழன், 14 ஏப்ரல், 2011

அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தரும் தளம்

போன் குறியீட்டு எண் தரும் தளம்




தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது. எந்த நாட்டி லிருந்தும் எந்த நாட்டிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடுகளின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே. இந்த தேவையை நிறைவு செய்திட, இணையத்தில் ஒரு தளம் இயங்குகிறது. http://www.simplecountrycodes.com என்ற முகவரியில் உள்ள தளம், அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண்ணைத் தருகிறது. இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற்படுத்த விரும்புகிறீர்கள்? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட்டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்பதனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும். பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப்பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப் பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.



வினாக்களுக்கு விடை தரும் இணையம் (கணித பாடம் தொடர்பான)



 மாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற  சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம் . மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகது 
 
இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை type செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்
 
(கீழே உள்ள படத்தினை காண்க )



 
உங்களுக்கு மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு .  கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும் . 

அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும் . ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும் . 

லிங்க் http://www.mathway.com/

http://www.mathway.com/problem.aspx?p=basicmath

பதிவு பயனுடையதாயின் வாக்களிக்க மறவாதிர்கள் உங்களின் வாக்குகள் மூலமே பதிவுகள் பலரை சென்று சேரும். எனவே மாணவ சமூகத்திற்கு சென்று சேர உங்களாலான பங்களிப்பினை செலுத்துங்கள் .


திங்கள், 4 ஏப்ரல், 2011

இனி password உம் கொடுக்கலாம் இணையத்தில் சேமித்து வைக்கும் பைல்களுக்கு

இன்று நாம் இணையத்தில் பைல்களை சேமித்து வைப்பதற்கு மிகச்சிறந்த தளம் ஒன்றை பற்றி பார்க்கப்போகிறோம்.அதாவது ஏணைய தளங்களை காட்டிலும் நல்ல தளம் ஏண் தெரியுமா? இலவசமாக சேமித்து வைப்பதற்கு நிறைய தளம் இருக்கிறது, ஆனால் நம்முடைய பைலை upload செய்த பிறகு, திரும்ப download செய்ய வேண்டும் என்றால் அந்த பைலை இலவசம் என்றால் ஆமை வேகத்தில் தான் download செய்ய முடியும் என்றும், எங்களுக்கு டாலர் இவ்வளவு செலுத்தினால் இவ்வளவு மாதம் வரைக்கும் நீங்கள் குதிரை வேகத்தில் download செய்ய முடியும் என்றுதான் அவர்களுடைய சேவையை வழங்கி வருகிறார்கள் இப்படி டாலர் கட்டாமல் இந்த சேவையை வழங்கும் ஒரு தளம் உள்ளது அதைப்பற்றித்தான் இன்றைய பதிவு.

நாம் இப்படி இணையத்தில் சேமித்து வைக்கும் போது அந்த பைலை இரண்டு விதமாக பிரிக்க முடியும். எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விருப்பம் என்றால் public ஆகவும், நாம் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் அதாவது பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் private ஆகவும் சேமிக்க முடியும். என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் private  ஆக சேமித்த பைல், தேடுஇயந்திரங்களில்தான் வராது ஆனால் நீங்கள் Custom URL ஏற்படுத்தி இருந்தால், அந்த URL மூலம்  private   ஆக சேமித்த பைலை யார் வேண்டுமானாலும் download செய்யலாம் தெரியுமா?

என்னடா...புரியவில்லையா??? பயப்படாதீங்க... இந்த பிரச்சினை யாருக்கு வரும் என்றால்  Custom URL  ஐ தெரிவு செய்யும் போது அது எந்த Folder என்று கேட்கும் அதற்கு நீங்கள் My Files என்பதை தெரிவு செய்து இருப்பீர்களாயின் அந்த Custom URL  மூலம் நீங்கள் சேமித்த அனைத்து பைலையும் download செய்ய முடியும்.( Custom URL மற்றும் அதற்குறிய Folder ஐ திரும்பவும் மாற்றிக்கொள்ள முடியும்.
 
இந்த தளத்தில் காணப்படும் சிறப்பம்சங்கள்

 01.குறித்த முக்கியமான பைல் இற்கு password கொடுக்கலாம்.இதனால் நீங்கள் அந்த பைல் ஐ public ஆக சேமித்தால் கூட உங்களுடைய password வேண்டும் அந்த பைல்  ஐ download செய்வதற்கு.

02 private Folder -  Custom URL இல் கூட தெரியுதில்லை  அந்த Folder.

03. Drag and Drop முறையிலும் Upload செய்ய முடியும்.

04. எத்தனை முறை Download செய்யப்பட்டது என்று பார்க்கலாம்.

05.குறித்த பைலை இமெயில் மூலம் அனுப்ப முடியும்.

06.இதில் download செய்யும் போது வேகம் குறைக்கப்படாது.

இங்கு சென்று நீங்கள் இலவசக்கணக்கு ஒன்றை ஆரம்பிக்கவும்.இதில் இலவசமாக குறைந்த அளவுதான் சேமித்து வைக்க முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். 
 
 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011



என்னிடம் எப்பொழுதாவது சரக்கு தீர்ந்து போனால் என் அண்ணனிடம் கேட்பது வழக்கம்... சொல்லப் போனால் இங்கு இருக்கும் பெரும்பாலான மென்பொருட்கள் என் அண்ணன் என்னிடம் கூறியது. அவ்வாறு நான் எதாவது செய்தி இருக்கிறதா என கேட்டபோது ஒரு  தளத்தின்  முகவரியினை கொடுத்தார்.


அத்தளத்தில் வரைகலைக்கு  தொடர்பான அனைத்து மென்பொருள்களும், இணைப்புகளும்,ஒளித்தோற்ற பயிற்சி, மின் புத்தகம் என அனைத்தும் இருந்தது. அது உங்களுக்கு பயன்படும் என எண்ணினேன். இதோ அந்த முகவரி


இத்தளத்தில் நீங்கள் HTML,PHP,CSC,Photoshop என அனைத்தும் மின் புத்தகம் மூலமோ அல்லது நிகழ்பட பயிற்சியின் மூலம் கற்றுத்தேறலாம். மேலும் இங்கு Wordpress பதிவர்களுக்கு தேவையான பலகைகளும், புதிதாக இணைய தளம் உருவாக்குபவர்களுக்கு தேவையான பலகைகளும், குறும்படம் (icon ), காவி வரைகலை (vector graphics ) என அனைத்தும் கிடைக்கிறது.

இத்தளத்தில் குறிப்பாக Lynda ஒளித்தோற்ற பயிற்சி நிறைய இருக்கிறது. இந்த Lynda ஒளித்தோற்ற பயிற்சி ஏறக்குறைய நாம் பயன்படுத்த கடினம் என்று நினைக்கும் அனைத்து மென்பொருளையும் சின்ன பையனுக்கு :) சொல்லித்தருவது போல சொல்லித்தரும்!

மேலும் இத்தளத்தை போன்று வேறு சில தளங்கள் உள்ளன. அதனை காண...

இப்பொழுது நீங்கள் சென்ற தளமானது, அதாவது http://www.similarsites.com/ தளமானது நீங்கள் தேடிய இணையதளம் போன்று வேறு ஏதாவது தளம் இருக்கிறதா என தேடிக் கூறும்.