வெள்ளி, 15 ஜூலை, 2011

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி?

பேச்சு ஆங்கிலத்தை (Spoken English) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகள்:

 ஆங்கிலம்



* 30 நாட்களில் பேச்சு ஆங்கிலம், Repidex, விவேகானந்தா கல்வி நிலையம் போன்றவற்றை நாடாதீர்கள். முறைப்படி இலக்கண விதிகளை நினைவு வைத்துப் பேச வேண்டி இருப்பது, உங்களை மனம் தளரச் செய்யலாம். நீங்கள் பேசிப் பழகப் பழக நாளடைவில் இலக்கணம் தானாக வரும்.

* பேச முற்படும் முன் நிறைய ஆங்கிலப் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டே இருங்கள். எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சிச் செய்திகள். பொருள் புரியாவிட்டாலும் ஓசைகள், சொற்களுக்குப் பழக்கப்பட உதவும்.

* உங்களுக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாவிட்டால், விளம்பர வாசகங்கள், கடைகளின் தட்டிகள், படம் போட்ட சிறுவர் கதை நூல்கள் போன்றவற்றை வாசிக்கத் தொடங்கலாம். HINDU போன்ற உயர் தர ஆங்கில இதழ்கள், அகரமுதலிகளை எடுத்த எடுப்பிலேயே புரட்டுவது மட்டும் ஆங்கிலம் பேச உதவாது.

* தமிழ் தெரியாத பிற மொழி நண்பர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகுங்கள். இந்தச் சூழ்நிலைகளில் உங்கள் பேச்சுப் பிழைகளைப் பொருட்படுத்த மாட்டார்கள். நீங்கள் பேசுவது அவருக்குப் புரிந்தாலே வெற்றி தான்.

* சரியோ தவறோ பேசத் தொடங்குங்கள். பேசவே தொடங்காமல் ஆங்கிலம் தெரியவில்லையே என்று வருந்துவதில் பயனில்லை. நீங்கள் எவ்வளவு கூடுதலாகவும் அடிக்கடியும் வெவ்வேறு விசயங்களைப் பேசிப் பழகுகிறீர்களோ அவ்வளவு விரைவில் பேச்சு ஆங்கிலம் கைக்கூடும்.

* நன்கு தெரிந்தவர்களிடம் குறை ஆங்கிலத்தில் பேசக் கூச்சமாக இருந்தால், முன் பின் தெரியாத இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டுக்கு, ஒரு வாடிக்கையாளர் சேவையைத் தொலைபேசியில் அழைக்கும் போது ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு இருந்தால் பேசிப் பாருங்கள்.

ஆங்கிலம் மட்டுமல்ல எந்த ஒரு மொழிக்கும் இந்தக் குறிப்புகள் பொருந்தும். உங்களுக்கு வேறு ஏதும் குறிப்புகள் தெரிந்தால் சொல்லுங்கள்.


எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செவிலியர்கள் தேவை!

எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர்கள் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

இதற்கான தகுதி தேர்வுகள் டில்லியில் மட்டுமே நடைபெறும்.

இந்த ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முதலில் ஒரு ஈமெயில் முகவரி இருக்க வேண்டும், www.aiimsexams.org யில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும், பிறகு அந்த ஈமெயில் முகவரிக்கு AIIMS இணையதளத்தில் இருந்து ஒரு வங்கி சலான் வரும், அந்த வங்கி சலானை மட்டுமே பயன்படுத்தி வங்கியில் பணம் செலுத்த முடியும்

வங்கியில் பணம் செலுத்திய பிறகு மீண்டும் www.aiimsexams.org என்ற முகவரிக்கு சென்று உங்களை பற்றிய விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும், ஆன்லைனில் பதிவு செய்ய உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை மென்பதிவு  மற்றும் உங்கள் கையொப்பத்தினை இட்டு ஒரு தாளில் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் இந்த முன்னேற்பாடுகளுடன் இணையதளைத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தை அனுப்பலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 8.8.2011 ஆகும்

1.எய்ம்ஸ் இணையதள பக்கம்
2.விண்ணப்பங்களை வரவேற்ற விளம்பரம் 
3.விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கான விளக்கம்
4.ஆன்லைன் விண்ணப்ப படிவத்திற்கான வழி


போலீஸ் இணையதளசேவை அறிமுகம்


தமிழக காவல் துறையில் http://www.tnpolice.gov.in என்ற இணைய தள சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் போலீசாருக்கு புகார் அனுப்பலாம். வழக்குகள் தொடர்பாக தங்களுக்கு தெரிந்த தகவல்களையும் தெரிவிக்கலாம்.
அவ்வாறு அனுப்பும் புகார் மற்றும் தகவல்கள் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்படும். அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புகார்தாரருக்கு தெரிவிக்கப்படும். இந்த இணையதளத்தில் காவல்துறை தொடர்பான அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.
 
 

புதன், 13 ஜூலை, 2011

குழந்தைகளை அறிவு மேதைகளாக ஆக மாற்ற உதவும் பயனுள்ள இலவசத் தளம்.


சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரையும் அறிவு மேதைகளாக மாற்றுவதற்கு வசதியாக உள்ள திறமையான, புத்திசாலிதனத்தை வளர்க்க கூடிய கதைகளை ஆன்லைன் மூலம் இலவச புத்தகமாக மட்டுமில்லாமல் ஆடியோவுடன்  படித்துக்கொண்டே கேட்பது போல ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

குழந்தைகளின் அடிப்படை அறிவை நாம் சரியாக பயன்படுத்தும்படி அமைத்து விட்டால் கண்டிப்பாக அந்த குழந்தை ஒரு ஜீனியஸ் ஆக வரும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. புத்தகங்களை படிப்பது ஒருகலை தான் என்றாலும் அறிவுள்ள  புத்தகங்களை  ஆடியோவுடன் கேட்பது சில தளங்களில் மட்டுமே நமக்கு இலவசமாக கிடைக்கும் அந்த வகையில் அறிவுள்ள  புத்தகங்களை ஆன்லைன் மூலம் காட்டியும் படித்துச் சொல்லவும் ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://meegenius.com

இத்தளத்திற்கு சென்று நம் குழந்தைகளின் அறிவுப்பசிக்கு சரியான விருந்து அளிக்கும் வகையில் பல வகையான அறிவை வளர்க்கும் இலவச புத்தகங்கள் ( Free books ) கிடைக்கிறது , இதில் எந்த புத்தகத்தை படிக்க வேண்டுமோ அந்த புத்தகத்தை சொடுக்கினால் போதும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமாக படத்துடனும் ஆடியோவுடனும் சொல்கின்றனர், காதால் கேட்டுக்கொண்டே படிப்பதால் ஆங்கில வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ளலாம்,  எளிமையான ஆங்கில வார்த்தைகள் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் அனைத்து புத்தகங்களும் உள்ளது, தினமும் ஒரு புத்தகம் என்று நம் குழந்தைகள் படித்தால் கூட மூன்று மாதத்தில் அவர்கள் கண்டிப்பாக  ஜீனியஸ் தான் முயற்சித்து பாருங்கள், நம் அனைத்து செல்ல குழந்தைகளுக்கும் இந்தப்பதிவை எடுத்துச்செல்லும் பொறுப்பை உங்களிடம் ஓப்படைக்கிறோம்.

கண்டிப்பாக இந்தப்பதிவு குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஆங்கில உச்சரிப்பை கற்பவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

திங்கள், 11 ஜூலை, 2011

ஆங்கிலம் கற்க சிறந்த இணையங்கள்




உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுகொள்ள பல இணையதளங்கள் உள்ளன அவற்றில் இருந்து நான்கு பயனுள்ள தளங்களை தொகுத்துள்ளேன்.

1.  FUN EASY ENGLISH

அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம் . சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஆடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்.




http://funeasyenglish.com/

2.GO 4 ENGLISH .COM

இந்த தளம் பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சொந்தமானது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கான ஆங்கில அறிவை இந்த தளம் வழங்குகிறது.



http://go4english.co.uk/


3. LEARN ENGLISH FREE ONLINE

ஆங்கில சொற்களுக்கான விளக்கத்தை படங்கள் மற்றும் வேடிக்கையாக கற்று தருகிறது இந்த தளம்.


http://www.learnenglish.de/

4.EXAM ENGLISH

பிரபல சர்வதேச ஆங்கில தேர்வுகளை உள்ளடக்கிய ஓர் பரீட்சை வழிகாட்டி தளமாகும் . இங்கு சென்று உங்கள் ஆங்கில அறிவினை பரீட்சித்து கொள்ள முடியும்.

http://www.examenglish.com/

ஞாயிறு, 10 ஜூலை, 2011

குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை வீடியோவுடன் சொல்லி கொடுக்கும் தளம்.


ராஜாக்களின் விளையாட்டு என்று செல்லமாக அழைக்கப்படும் செஸ் விளையாட்டை குழந்தைகள் முதல் செஸ் விளையாட்டிற்கு புதியவர்கள் வரை அனைவருக்கும் எப்படி செஸ் விளையாட வேண்டும் என்று வீடியோவுடன் சொல்லிகொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

துருப்பிடித்து கிடக்கும் நம்முடைய மூளைக்கு வேலை கொடுப்பதற்கு மட்டுமல்ல , சிந்தனையை தூண்டும் ஒரு அரிய  விளையாட்டான செஸ் விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்பதை குழந்தைகள் முதல் அனைவருக்கும் புரியும் வண்ணம் வீடியோவுடன் எடுத்துச் சொல்ல ஒரு தளம் உள்ளது .

இணையதள முகவரி : http://www.chesskid.com

குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை சொல்லி கொடுப்பதற்கு நேரம் இல்லையே என்று சொல்லும் அனைவருக்கும், உங்களின் குழந்தைகளுக்கு சதுரங்க விளையாட்டின் அடிப்படை பயிற்சியையும் அதற்கான நெளிவு சுளிவுகளையும் இத்தளம் தெளிவாக எடுத்து சொல்கிறது. குழந்தைகள், பெற்றோர் மற்றும் செஸ் பயிற்சிவிப்பாளர்கள் என மூவருக்கும் எப்படி திறமையாக விளையாடி  ஜெயிக்கலாம் என்பதை வீடியோவுடன் காட்டுகிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொண்டு நேரடியாக செஸ் விளையாடலாம் , நமக்கு நேரம் கிடைக்கும் போது இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து விட்ட இடத்தில் இருந்து மறுபடியும் ஆரம்பிக்கலாம், இதுவரை நீங்கள் செஸ் விளையாடி பெற்ற மதிப்பெண்கள் என்ன என்பது வரை அத்தனையுமே காட்டுகிறது, ஓவ்வொரு நாளும் புதிதாக வெற்றி பெற்றவர்களின் வீடியோவும் நமக்கு காண கிடைக்கிறது. செஸ் விளையாடும்  நண்பர்களுக்கும் இனி செஸ் விளையாட இருக்கும் குழந்தைகளுக்கும் மற்றும்  நண்பர்களுக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.